தூத்துக்குடி: மணல் தெருவைச் சேர்ந்தவர் பெர்னி கொரைரா மகன் இக்னேஷியஸ் ப்ரேசர் கொரைரா (42). இவரிடம், திருநெல்வேலி கீழமகாராஜ நகரைச் சேர்ந்த தங்கராஜன் மகன் சாலமோன் அற்புதராஜ் (33) என்பவர் அறிமுகமாகி, தான் அரசு ஒப்பந்ததாரராக வேலை பார்ப்பதாகவும், பர்னஸ் ஆயிலின் விற்பனை நல்ல ஏற்றத்தில் உள்ளதால், பர்னஸ் ஆயிலை வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பியா இக்னேஷியஸ் மொத்தம் ரூபாய் 24,05,000 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலம் சாலமோன் அற்புதராஜுக்கு கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சாலமோன் அற்புதராஜ், பர்னஸ் ஆயிலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.