தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐயப்ப பக்தர்களுக்கு உதவி மையம் - அமைச்சர் சேகர்பாபு! - AYYAPPA DEVOTEES

தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கோப்புப்படம்
ஐயப்ப பக்தர்கள் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 11:02 PM IST

சென்னை :சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) திருக்கோயிலில் மண்டல பூஜை இன்று ( நவ 11) முதல் டிச 26 வரையும் மற்றும் மகரவிளக்கு ஜோதி திருவிழா டிச 30 முதல் ஜன 19 வரை நடைபெறுவதை முன்னிட்டு, சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மையம் ஜன 24 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மைய சேவையினை கட்டணமில்லா தொலைப்பேசி எண்களான 044-28339999 மற்றும் 1800 425 1757 ஆகிய எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details