சென்னை:இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. விடுமுறை தினம், சென்னையில் நடக்கும் மிகப்பெரிய விமான நிகழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், காலை முதலே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என பொதுமக்கள் லட்சக்கணக்கில் மெரினா கடற்கரையில் திரண்டனர்.
நேற்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் சென்னை மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 15 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பெற்றது.
மெரினாவில் குவிந்த குப்பை:சுட்டெரிக்கும் வெயிலும் நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பொதுமக்கள் தங்கள் கொண்டுவந்த தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானங்களின் பாட்டில்கள் உள்ளிட்டவற்றின் கழிவுகளை அங்கே விட்டுச் சென்று விட்டன.இதனால் மெரினா கடற்கரை முழுவதும் குப்பை குளமாக காட்சியளித்தது.
இதையும் படிங்க:விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!