தூத்துக்குடி:தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி அனுசியா. இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்து வரும் சத்தியமூர்த்தி தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவி அனுசுயாவை அடித்து துன்புறுத்துவடன் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதே போன்று நேற்று இரவும் சத்தியமூர்த்தி மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வழக்கம் போல சத்தியமூர்த்தி தனது மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவரது மூத்த மகனான 15 வயது சிறுவன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தந்தை சத்தியமூர்த்தியை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.