சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினந்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை - டெல்லி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள், சென்னையில் இருந்து சீரடி இடையே இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று, சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் விமானம் ஒன்று என 6 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், டெல்லியில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள், சீரடியில் இருந்து சென்னை வரும் ஒரு விமானம், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் ஒரு விமானம் என 6 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பாடு மற்றும் வருகை என மொத்தம் 12 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.