தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தவிருந்த 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல்! - 112 KG Drugs seized in Chennai - 112 KG DRUGS SEIZED IN CHENNAI

சென்னையில் இருந்து சரக்குக் கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு கடத்தவிருந்த 112 கிலோ மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

கடத்தப்பட்ட போதைப் பொருள் புகைப்படம்
கடத்தப்பட்ட போதைப் பொருள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 3:39 PM IST

சென்னை: சென்னை துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (செப்.26) சரக்கு கப்பல் ஒன்று ஆஸ்திரேலியாவிற்கு செல்ல தயாராக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சென்னையிலிருந்து கப்பலில் போதைப்பொருள் கடத்திச் செல்வதாகவும், சரக்கு கப்பலில் இருந்து புறப்பட தயாராக இருப்பதாகவும் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தனிப்படை அதிகாரிகள் துறைமுகத்தில் புறப்பட தயாராக இருந்த சரக்கு கப்பலை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது சரக்கு கப்பலில் உள்ள பார்சல்களை ஒவ்வொன்றாக இறக்கி பார்த்த பொழுது, குவாட்ஸ் என்கிற பவுடர் தலா 50 கிலோ வீதம் 450 மூட்டைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

குவாட்ஸ் பவுடர் என்பது டியூப் லைட் (Tube Light) உள்ளே பயன்படுத்தக்கூடிய வெள்ளை நிற பவுடர் என்பது பொருளாகும். இந்த பவுடர் 450 மூட்டைகளில் நிரப்பப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு பார்சல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு மூட்டைகளிலும் சூடோ எபிட்ரின் என்கிற போதைப்பொருள் தயாரிக்கக்கூடிய மூலப் பொருளானது மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்ட மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பெட்டகத்தில் உள்ள மூட்டைகளை பிரித்துப் பார்த்து கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவில் கொள்ளை.. தமிழ்நாட்டில் என்கவுண்டர்.. நாமக்கல் சேசிங் சம்பவ பின்னணி!

அதில் 37 குவாட்ஸ் தூள் மூட்டைகளில் தலா 3 கிலோ என 37 மூட்டைகளில் சூடோ பெட்டரின் போதைப்பொருள் இருந்துள்ளது. மொத்தம் 112 கிலோ சூடோ எபிட்ரின் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அந்த பார்சல் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், சென்னையைச் சேர்ந்த இருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் முதற்கட்ட விசாரணையில் இருவரும் துறைமுக கார்கோ ஷிப்பிங்கில் ஏஜென்ட் ஆக பணியாற்றி இருப்பதும், தொலைபேசி அழைப்பின் மூலமாக இந்த பார்சல்களை தங்கள் பெயரில் பதிவு செய்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாகவும், ஆனால், அதில் போதைப் பொருட்கள் இருப்பது தங்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள், இந்த போதைப் பொருள் கடத்தலில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளார்கள்? இவர்களுடைய தொலைபேசி அழைப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து தொடர்பு கொண்ட நபர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details