தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பேரன், கொள்ளுப்பேரன்களுடன் வந்து வாக்களித்த 104 வயது முதியவர்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Coimbatore 104 year old man cast vote: கோயம்புத்தூரில் 104 வயது முதியவர் தனது மகன், பேரன், மற்றும் கொள்ளுப்பேரன்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளார்.

கோவையில் பேரன், கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்த 104 வயது முதியவர்
கோவையில் பேரன், கொள்ளு பேரன்களுடன் வந்து வாக்களித்த 104 வயது முதியவர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 9:02 PM IST

கோயம்புத்தூர்: 18வது மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்களிக்க காலை 7 மணி முதல் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வர இயலாத முதியவர்களின் இல்லத்திற்கேச் சென்று 12D படிவம் மூலம் தேர்தல் ஆணையம் தபால் வாக்கைப் பெற்றது. இந்நிலையில் கோவை மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற 104 வயது முதியவர் ஒருவர், தனது மகன், பேரன், மற்றும் கொள்ளுப்பேரன்களுடன் வந்து வாக்களித்துள்ளார்.

கோவை மாவட்டம், கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 104 வயதான விவசாயி கணபதி என்பவர், தனது வீட்டில் இருந்து காரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது அங்கிருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கணபதி கூறுகையில், “நான் 21 வயதில் இருந்து வாக்களித்து வருவதாகவும், இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்க தவறியது இல்லை என்றார். வெளியூர் சென்றிருந்தாலும் வாக்குப்பதிவு அன்று வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், அனைவரும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லாத விவகாரம் குறித்த அண்ணாமலை புகார் - சத்யபிரதா சாகு கூறியது என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details