ஐதராபாத்: 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணியாக இருந்த இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை கதையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜவான், அனிமல் உள்ள பல்வேறு படங்களை தயாரித்த டீ சிரீஸ் தயாரிப்பு நிறுவனம் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை படமாக எடுக்க முன்வந்துள்ளது.
டீ சிரீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் புஷன் குமார் மற்றும் 200 நாட் அவுட் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ரவி பக்சந்த்கா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ரவி பக்சந்தகா கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான சச்சினின் வாழ்கை வரலாற்றை கொண்டு எடுக்கப்பட்ட Sachin: A Billion Dreams என்ற படத்தில் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் படத்தில் கதாநாயகன் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் தேர்வு குறித்து படக் குழு ரகசியம் காத்து வருகிறது. அதேநேரம் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்எஸ் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் யுவராஜ் சிங் கதாபாத்திரத்தில் நடித்த ஹெர்ரி தங்கிரி (Herry Tangiri) என்பவரை நடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
ஜெயம் ரவியை, யுவராஜ் சிங் கதாபாத்திரல் நடிக்க வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் கதாபாத்திரம் தேர்வு குறித்து படக்குழு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனித்துவமான விளையாட்டு பயணத்தை கதைக் களமாக கொண்ட படம் யுவராஜ் சிங்கின் சுயசரிதையான The Test of My Life என்ற அவரது புத்தகத்தை தழுவி எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்சர்கள், 2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அவரது பங்களிப்பு, புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து 2012ஆம் ஆண்டு இந்திய அணியில் இணைந்தது, 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றது வரை பல்வேறு சுவாரஸ்யத்தக்க தகவல்கள் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டீ சிரீஸ் தயாரிப்பாளர் புஷன் குமார் கூறுகையில், "யுவராஜ் சிங்கின் வாழ்க்கை நெகிழ்ச்சி, வெற்றி மற்றும் ஆர்வத்தின் அழுத்தமான கதை. நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரராக இருந்து கிரிக்கெட் ஹீரோவாகவும், பின்னர் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவும் அவரது பயணம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சொல்லவும் கேட்கவும் வேண்டிய கதையை பெரிய திரையில் கொண்டு வந்து அவரின் அசாத்திய சாதனைகளை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
இதையும் படிங்க:"இதுக்குத்தான் வினேஷ் போகத்துக்கு வெள்ளி கொடுக்கல"- சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் விளக்கம்! - CAS reason to reject vinesh plea