சன்ரைசஸ் ஐதராபத் அணி நட்சத்திர வீரர் இஷான் கிஷனை 11.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
IPL 2025 Auction Live: சன்ரைசஸ் அணியில் இஷான் கிஷன்!
Published : Nov 24, 2024, 1:19 PM IST
|Updated : Nov 24, 2024, 7:59 PM IST
ஐதராபாத்:2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் இன்று நடைபெறுகிறது. மதியம் 3.30 மணிக்கு மேல் தொடங்க உள்ள ஏலத்தின் நேரலையை இங்கே காணலாம்.
LIVE FEED
இஷான் கிஷன் ரூ.11.25 கோடி!
இஷான் கிஷன்!
நட்சத்திர வீரர் இஷான் கிஷனை ஏலத்தில் எடுப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி.
கொல்கத்தாவில் ரஹ்மனுல்லா குர்பாஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆப்கானிஸ்தான் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாசை அவரது ஆரம்பத் தொகையான 2 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.
ஆர்சிபியில் பில் சால்ட்!
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 11 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.
ஜானி பேர்ஸ்டோவ் அன்சோல்டு!
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் எந்த அணியாலும் வாங்க விரும்பப்படாத நிலையில் அன்சோல்டு வீரர் ஆனார்.
கொல்கத்தாவில் குயின்டன் டி காக்!
தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கை 3 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
கிளைன் மேக்ஸ்வெல்!
பஞ்சாப் அணி ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல்லை 4 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ்!
ஆஸ்திரேலிய 20 ஓவர் கேப்டன் மிட்செல் மார்ஷை 3 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
பஞ்சாப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ்
ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிசை 11 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
யார் இந்த வெங்கடேஷ் ஐயர்?
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரான வெங்கடேஷ் ஐயர் ஐபில் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் மத்திய பிரதேச அணிக்காக உள்ளூர் மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 2 ஒருநாள் மற்றும் 9 டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
வெங்கடேஷ் ஐயர் அதிரடி!
மத்திய பிரதேச வீரர் வெங்கடேஷ் ஐயர் 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியில் இணைந்தார்.
சென்னை அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 6 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு சென்னை அணியில் இணைந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிராக்கி!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை வாங்குவதில் சென்னை - ராஜஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சென்னை அணியில் ரச்சின் ரவிந்திரா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய் தொகைக்கு ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்தது.
ரச்சின் ரவீந்திரா சென்னை மும்முரம்!
நியூசிலாந்து நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திராவை விலைக்கு வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மும்முரம் காட்டி வருகிறது.
ஐதராபத்தில் ஹர்சல் பட்டேல்!
ஹர்சல் பட்டேல்லை 8 கோடி ரூபாய்க்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்!
ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கை 9 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி விலைக்கு வாங்கியது.
சென்னையில் ராகுல் திரிபாதி!
ராகுல் திரிபாதி சென்னை அணியால் 3.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
டேவிட் வார்னர் அன்சோல்டு!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அன்சோல்டு வீரரானார்.
சென்னை அணியில் டிவான் கான்வாய்!
நியூசிலாந்து வீரர் டிவான் கான்வாயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அவர் சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எய்டன் மார்க்ராம்!
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டம் மார்க்ராம் 2 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
தேவதூத் படிக்கல்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் தேவதூத் படிக்கல்லை எந்த அணியும் விலைக்கு வாங்க விரும்பாத நிலையில் அன்சோல்டு பிளேயர் ஆனார்.
டெல்லியில் ஹாரி ப்ரூக்!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹாரி ப்ரூக்கை 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
தொடங்கியது ஏலம்!
உணவு இடைவேளையை தொடர்ந்து ஐபிஎல் மெகா ஏலம் மீண்டும் தொடங்கியது.
டெல்லியில் கே.எல் ராகுல்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலை 14 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
கே.எல் ராகுலுக்கு கடும் கிராக்கி!
கே.எல் ராகுலை விலைக்கு வாங்க டெல்லி கேபிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
லியம் லிவிங்ஸ்டன்!
இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் 8 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம்.
முகமது சிராஜ் ரூ.12.75 கோடிக்கு ஏலம்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை 12 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
யுஸ்வேந்திர சாஹல்!
ஆரம்பத் தொகையான 2 கோடி ரூபாயில் ஏலத்திற்கு வந்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
டேவிட் மில்லர்!
தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரை 7 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலம்.
முகமது ஷமி ரூ.10 கோடிக்கு ஏலம்!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 கோடி ரூபாய்க்கு ஐதராபாத் சன்ரைசஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணிக்கு சறுக்கல்!
ஆர்டிஎம் கார்டு மூலம் ரிஷப் பன்ட்டை தங்கள் பக்கம் தக்கவைக்க டெல்லி அணி கடும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தடாலடியாக 27 கோடி ரூபாய் வழங்குவதாக கூறி ரிஷப் பன்ட்டை தங்கள் அணிக்கு எடுத்துக் கொண்டது.
ரிஷப் பன்ட் ரூ.27 கோடிக்கு ஏலம்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் புது வரலாறு படைத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பன்ட் படைத்துள்ளார்.
ஆர்வத்தை தூண்டும் பன்ட்!
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டை ஏலத்தில் எடுக்க பெங்களூரூ, குஜராத் அணிகள் இடையே கடும் போட்டி.
மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 11 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
ஜோஸ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ்!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லரை 15 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டனஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் புது சரித்திரம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சப் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஏலம் போய் சாதனை படைத்தார்.
ரபடாவை வாங்கிய குஜராத்!
தென் ஆப்பிரிக்க வீரர் கஜிசோ ரபடாவை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
அர்ஷ்தீப் சிங் கோடி ரூபாய்க்கு 18 கோடிக்கு ஏலம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் கார்டு மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது.
முதல் நாள் ஏலம் எப்படி இருக்கும்?
மெகா ஏலத்தின் முதல் நாளில் ஏறத்தாழ 84 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இரண்டு செட்டுகளாக வீரர்கள் ஏலம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. முதல் செட் ஏலம் அதைத் தொடர்ந்து உணவு இடைவேளை, கேப்டு வீரர்கள், ஆல் ரவுண்டர்கள் பட்டியல், விக்கெட் கீப்பர்கள், 15 நிமிடம் தேநீர் இடைவேளை, மீண்டும் கேப்டு பவுலர்கள், 10 நிமிட இடைவேளை அதைத் தொடர்ந்து முதல் செட் அன்கேப்டு வீரர்கள் ஏலம் என இப்படித் தான் முதல் ஐபிஎல் மெகா ஏலம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணிகளிடம் உள்ள தொகை எவ்வளவு?
ஐபிஎல் அணிகளிடம் உள்ள தொகை மற்றும் ஆர்டிஎம் கார்டு விவரம்:
மும்பை இந்தியன்ஸ் ₹ 45 crore | 1 (1 uncapped) |
சென்னை சூப்பர் கிங்ஸ் ₹55 crore | 1 (1 uncapped/1 capped) |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ₹51 crore | 0 |
டெல்லி கேபிட்டல்ஸ் ₹73 crore | 2 (1 uncapped/2 capped) |
குஜராத் டைட்டன்ஸ் ₹69 crore | 1 (1 capped) |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ₹69 crore | 1 (1 capped) |
பஞ்சாப் கிங்ஸ் ₹ 110.5 crore | 4 (4 capped) |
ராஜஸ்தான் ராயல்ஸ் ₹ 41 crore | 0 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ₹ 83 crore | 3 (1 uncapped/3 capped) |
சன்ரைசஸ் ஐதராபாத் ₹ 45 crore | 1 (1 uncapped) |
எத்தனை மணிக்கு ஏலம் தொடங்கும்?
ஐதராபாத்: இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலம் தொடங்க உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டி 3.20 மணிக்கு முடிய உள்ளதை அடுத்து ஐபிஎல் ஏலம் தொடங்கும். இந்திய நேரப்படி இரவு 10.30 மணி வரை முதல் நாள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக தொகை போகும் வீரர்கள்?
ஐதராபாத்:2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சில வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என கருதப்படுகிறது. உதாரணமாக 12 வீரர்கள் அதிக தொகைக்கு அணிகளால் ஏலம் எடுக்கப்பவார்கள் எனத் தெரிகிறது. ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஸ் பட்லர், அர்ஷ்தீப் சிங், கஜிசோ ரபடா, மிட்செல் ஸ்டார்க், கே.எல். ராகுல், யுஸ்வேந்திர சஹல், லியாம் லிவிங்ஸ்டோம், டேவிட் மில்லர், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இருப்பார்கள் என தெரிகிறது.