தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPl Auction 2025 Live: சென்னை அணியில் புதுமுகம்! - IPL MEGA AUCTION 2025

Etv Bharat
Representative Image (ETV Bharat Sports Team)

By ETV Bharat Sports Team

Published : Nov 25, 2024, 3:44 PM IST

Updated : Nov 25, 2024, 7:54 PM IST

ஐதராபாத்:2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் இன்று (நவ.25) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. மதியம் 3.30 மணிக்கு மேல் தொடங்கிய ஏலத்தின் நேரலையை இங்கே காணலாம்.

LIVE FEED

7:52 PM, 25 Nov 2024 (IST)

நாதன் எலிஸ்

ஆஸ்திரேலிய வீரர் நாதன் எலிசை 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

7:40 PM, 25 Nov 2024 (IST)

கமிந்து மெண்டிஸ்!

இலங்கை வீரர் கமிந்து மெண்டிசை 75 லட்ச ரூபாய்க்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி வாங்கியது.

7:37 PM, 25 Nov 2024 (IST)

ஜேக்கப் பெத்தல்!

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தலை 2 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விலைக்கு வாங்கியது.

7:24 PM, 25 Nov 2024 (IST)

அன்சோல்டு வீரர்கள் பட்டியல்!

அல்ஸாரி ஜோசப், க்வேனா மபாகா, ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் லூக் வூட், சச்சின் தாஸ் ஆகியோர் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

7:24 PM, 25 Nov 2024 (IST)

ரீஸ்ஸி டாப்ளே

இங்கிலாந்து வீரர் ரீஸ்ஸி டாப்ளே 75 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

7:23 PM, 25 Nov 2024 (IST)

அல்ஜாரி ஜோசப் அன்சோல்டு!

வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஜாரி ஜோசப் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார்.

7:18 PM, 25 Nov 2024 (IST)

ஜெயந்த் யாதவ்!

இந்திய வீரர் ஜெயந்த் யாதவ்வை 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.

7:17 PM, 25 Nov 2024 (IST)

மிட்செல் சான்ட்னர்!

நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தனது அடிப்படைத் தொகையான 2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

7:14 PM, 25 Nov 2024 (IST)

ஸ்டீவ் சுமித் அன்சோல்டு!

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் சுமித் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார்.

7:11 PM, 25 Nov 2024 (IST)

குர்ஜப்நீத் சிங்!

குர்ஜப்நீத் சிங்கை வாங்க சென்னை மற்றும் குஜராத் அணிகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் 2.20 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது.

7:10 PM, 25 Nov 2024 (IST)

ஆகாஷ் சிங்!

இந்திய வீரர் ஆகாஷ் சிங்கை 30 லட்ச ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

7:09 PM, 25 Nov 2024 (IST)

அஸ்வனி குமார்!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வனி குமாரை 30 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

7:07 PM, 25 Nov 2024 (IST)

ரிஷி தவான் அன்சோல்டு!

இந்திய வீரர் ரிஷி தவான் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார்.

7:03 PM, 25 Nov 2024 (IST)

CSK Squad!

சென்னை அணியில்: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கன்வாய், ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், எம்.எஸ் தோனி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், சாம் கர்ரண், அன்ஷுல் கம்போஜ், தீபக் ஹூடா, மதீஷ பத்திரனா, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, நூர் அகமது,

7:02 PM, 25 Nov 2024 (IST)

அணிகளுக்கு தேவைப்படும் வீரர்கள் எண்ணிக்கை:

பஞ்சாப் கிங்ஸ் - 10 (2 வெளிநாட்டு வீரர் உள்பட),

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 10 (2 வெளிநாட்டு வீரர் உள்பட),

சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 (3 வெளிநாட்டு வீரர் உள்பட),

ராஜஸ்தான் ராயல்ஸ் - 11 (4 வெளிநாட்டு வீரர் உள்பட),

மும்பை இந்தியன்ஸ் - 12 (4 வெளிநாட்டு வீரர் உள்பட),

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 9 (1 வெளிநாட்டு வீரர் உள்பட),

குஜராத் டைட்டன்ஸ் - 4 (3 வெளிநாட்டு வீரர் உள்பட),

சன்ரைசஸ் ஐதராபாத் - 10 (4 வெளிநாட்டு வீரர் உள்பட),

டெல்லி கேபிட்டல்ஸ் - 9 (3 வெளிநாட்டு வீரர் உள்பட),

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 8 (4 வெளிநாட்டு வீரர் உள்பட).

6:56 PM, 25 Nov 2024 (IST)

அணிகளிடம் உள்ள மீதத் தொகை!

பஞ்சாப் கிங்ஸ் - ரூ.8.20 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.7.55 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.7.50 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.5.85 கோடி

மும்பை இந்தியன்ஸ் - ரூ.5.80 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.5 கோடி

குஜராத் டைட்டன்ஸ் ரூ.3.95 கோடி

சன்ரைசஸ் ஐதராபாத் - ரூ.375 கோடி

டெல்லி கேபிட்டல்ஸ் - ரூ.3.50 கோடி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரூ3.10 கோடி

6:50 PM, 25 Nov 2024 (IST)

நுவர் துஸாரா!

இலங்கை வீரர் நுவர் துஸாரா 1 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

6:49 PM, 25 Nov 2024 (IST)

ஹர்னூர் பன்னு!

இந்திய வீரர் ஹர்னூர் பன்னு 30 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம்.

6:45 PM, 25 Nov 2024 (IST)

ஜெயதேவ் உனட்கட்!

இந்திய பேட்ஸ்மேன் ஜெயதேவ் உனட்கட் 1 கோடி ரூபாய் சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஏலம்.

6:41 PM, 25 Nov 2024 (IST)

இஷாந்த் சர்மா!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

6:41 PM, 25 Nov 2024 (IST)

முஸ்தபிசுர் ரஹ்மான்!

வங்கதேச நட்சத்திர வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார்.

6:40 PM, 25 Nov 2024 (IST)

உம்ரான் மாலிக் அன்சோல்டு!

இந்திய வீரர் உம்ரான் மாலிக் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார்.

6:38 PM, 25 Nov 2024 (IST)

ஸ்பென்சர் ஜான்சன்

ஆஸ்திரேலிய வீரர் ஸ்பென்சர் ஜான்சன் 2 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம்.

6:38 PM, 25 Nov 2024 (IST)

ரோமாரியோ ஷெப்பர்டு!

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமாரியோ ஷெப்பர்டை 1 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

6:34 PM, 25 Nov 2024 (IST)

தமிழக வீரர் சாய் கிஷோர்!

தமிழக வீரர் சாய் கிஷோரை 2 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது.

6:32 PM, 25 Nov 2024 (IST)

அசமத்துல்லா ஓமர்சாய்!

ஆப்கானிஸ்தான் வீரர் அசமத்துல்லா ஓமர்சாயை 2 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

6:30 PM, 25 Nov 2024 (IST)

வில் ஜேக்ஸ்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வில் ஜேக்ஸை 5 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

6:27 PM, 25 Nov 2024 (IST)

தீபக் ஹூடா

தீபக் ஹூடாவை ஒரு கோடியே 70 லட்ச ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

6:22 PM, 25 Nov 2024 (IST)

மொயின் அலி அன்சோல்டு

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார். சென்னை அணி அவரை வாங்க மறுப்பு தெரிவித்தது.

4:52 PM, 25 Nov 2024 (IST)

கேசவ் மகராஜ் அன்சோல்டு

அகேல் ஹொசைன், விஜயகாந்த் வியாஸ்காந்த், அடில் ரஷீத் மற்றும் கேசவ் மகராஜ் ஆகியோர் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

4:51 PM, 25 Nov 2024 (IST)

விஜயகாந்த் வியாஸ்யகாந்த்!

இலங்கைத் தமிழ் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் அன்சோல்டு வீரர் ஆனார்.

4:45 PM, 25 Nov 2024 (IST)

மும்பையில் ஆப்கான் வீரர்

ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்பரை 4 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

4:41 PM, 25 Nov 2024 (IST)

லாக்கி பெர்குசன்!

நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனை 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.

4:39 PM, 25 Nov 2024 (IST)

ஆகாஷ் தீப்!

இந்திய பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பை 8 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது.

4:36 PM, 25 Nov 2024 (IST)

மும்பை இந்தியன்ஸ் அணியில் தீபக் சஹர்!

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 9 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு தீபக் சஹரை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

4:34 PM, 25 Nov 2024 (IST)

தீபக் சஹருக்கு கடும் போட்டி!

அடிப்படைத் தொகையான 2 கோடி ரூபாயில் களமிறங்கிய தீபக் சஹரை ஏலம் எடுப்பதில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

4:31 PM, 25 Nov 2024 (IST)

முகேஷ் குமார்

இந்திய வீரர் முகேஷ் குமாரை 8 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

4:26 PM, 25 Nov 2024 (IST)

பெங்களூருவில் புவனேஷ்வர் குமார்!

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது.

4:25 PM, 25 Nov 2024 (IST)

புவனேஷ்வர் குமாருக்கு கடும் போட்டி!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை கைப்பற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி.

4:23 PM, 25 Nov 2024 (IST)

ஜெரால்டு கோட்ஸீ!

தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்டு கோட்ஸீயை 2 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

4:19 PM, 25 Nov 2024 (IST)

ராஜஸ்தானில் துஷர் தேஷ்பாண்டே!

துஷார் தேஷ்பாண்டேவை 6 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

4:13 PM, 25 Nov 2024 (IST)

அலெக்ஸ் கேரி அன்சோல்டு!

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அன்சோல்டு வீரரானார்.

4:06 PM, 25 Nov 2024 (IST)

கே.எஸ் பரத் அன்சோல்டு!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத் அன்சோல்டு வீரர் ஆனார்.

4:04 PM, 25 Nov 2024 (IST)

மும்பையில் தென் ஆப்பிரிக்க வீரர்!

தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கில்டனை அடைப்படைத் தொகையான 1 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

3:59 PM, 25 Nov 2024 (IST)

நிதிஷ் ரானா!

இந்திய வீரர் நிதிஷ் ரானா 4 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம்.

3:54 PM, 25 Nov 2024 (IST)

அன்சோல்டு வீரர்கள்!

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், அஜிங்ய ரஹானே, பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ஆகியோர் அன்சோல்டு வீரர்களாகினர்.

3:51 PM, 25 Nov 2024 (IST)

குர்னல் பாண்ட்யா!

இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குர்ணால் பாண்ட்யாவை 5 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கைப்பற்றியது.

3:50 PM, 25 Nov 2024 (IST)

சிஎஸ்கேவில் சாம் கர்ரன்!

சாம் கர்ரனை 2 கோடியே 40 லடச் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

3:46 PM, 25 Nov 2024 (IST)

குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தர்!

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை 3 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

3:41 PM, 25 Nov 2024 (IST)

கேன் வில்லியம்சன் அன்சோல்டு!

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லிம்யம்சன் அன்சோல்டு வீரர் ஆனார்.

Last Updated : Nov 25, 2024, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details