கான்பூர்:உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. எந்த டெஸ்ட் போட்டியிலும் இல்லாத வகையில் இந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் எண்ணற்ற சாதனைகளை படைத்து வருகின்றனர்.
முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட், 3 ஆயிரம் ரன்களை கடந்து ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்தார். மேலும் 73 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய ஜடேஜா, குறைந்த போட்டிகளில் இந்த சாதனை படைத்த முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசிய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 3 ஓவர்களில் 50 ரன்களை கடந்து, டெஸ்ட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது. அதேபோல் அதிவேகமாக 100 ரன்களை கடந்தும் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் புது மைல்கல் படைத்தது.
தற்போது இந்த சாதனை பட்டியலில் இந்திய நட்சத்திரம் விராட் கோலியும் இணைந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் 47 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். மொத்தம் 594 இன்னிங்ஸ்களில் விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார்.
கோலிக்கு அடுத்தபடியாக இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27 ஆயிரம் ரன்களை கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இலங்கை வீரர் குமார் சங்கக்ககராவும் (648 இன்னிங்ஸ்), 4வது இடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கும் (650 இன்னிங்ஸ்) உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: