டெல்லி:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த விளையாட்டில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பிடி உஷா கூறுகையில், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு ஒலிம்பிக் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் வினேஷ் போகத்தை சந்தித்து பேசினோம்.
இந்திய ஒலிம்பிக் சங்கமும், அரசும் வினேஷ் போகத்துக்கு முழு ஆதரவை அளிக்கும் என உறுதியளித்தோம். இந்தியாவின் மல்யுத்தக் கூட்டமைப்பு வினேஷ் போகத்துக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ மற்றும் மனரீதியான ஆதரவை வழங்கி வருகிறோம். வினேஷி போகத்தின் மருத்துவக் குழுவின் அயராத முயற்சியை நங்கள் நன்கு அறிவோம். இரவு முழுக்க போராடி எடையை குறைத்தார்.
100 கிராம் எடையை எங்களால் குறைக்க முடியாவில்லை. நாங்கள், ஒலிம்பிக் சங்கத்திடம் எவ்வளோவோ முயற்சி செய்தோம். கடுமையான வாதங்களை எடுத்துரைத்தோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் என்று பிடி உஷா தெரிவித்தார்.