தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Sports Team

Published : Sep 4, 2024, 2:34 PM IST

ETV Bharat / sports

புதிதாக 18 கால்பந்து மைதானங்கள்- உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு! - 18 football stadium in UttarPradesh

கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிதாக 18 கால்பந்து மைதானங்கள் உருவாக்கப்படும் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath during Football Match (PTI Photo)

லக்னோ:புகழ்பெற்ற கொல்கத்தா டெர்பி காலந்து விளையாட்டு கடந்த 2அம் தேதி லக்னோவில் உள்ள கேடி சிங் பாபு மைதானத்தில் முதல் முறையாக நடைபெற்றது. நாட்டின் இரண்டு புகழ்பெற்ற கால்பந்து அணிகளான மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் முதல் முறையாக லக்னோவில் மோதிக் கொண்டன.

கொல்கத்தாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக போட்டி உத்தர பிரதேசத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கால்பந்து விளையாட்டை உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் மொத்தம் உள்ள 18 ஆணையரகங்களில் தலா 1 கால்பந்து மைதானம் என மொத்தம் 18 கால்பந்து மைதானங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது தவிர மாநிலத்தில் உள்ள 827 கால்பந்து மைதானங்கள் புனரமைக்கப்பட்டு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் கால்பந்து விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மைதானங்களை உருவாக்கும் பணிகளை அரசு வேகமெடுத்து கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா போட்டி! ராகுலுடன் சந்திப்பு! - Vinesh Phogat joins congress

ABOUT THE AUTHOR

...view details