நியூயார்க்:20 அணிகள் பங்கேற்று நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 22வது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - கனடா மோதின.
நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.
இதில், அதிகபட்சமாக ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் முகமது அமீர், ஹரிஷ் ரவுப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நசிம் ஷா, அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அணி. தொடக்க ஆட்டக்காரரகளாக முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களமிறங்கினர். இந்த இலக்கை விரைவில் எட்டினால் பாகிஸ்தான் ரன் ரேட் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.