பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியானது பாரிஸ் மாகாணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தென் கொரிய பெண்கள் அணியைச் சேர்ந்த லிம் சி-ஹியோன், நாம் சு-ஹியோன் மற்றும் ஜியோன் ஹன்-யங் ஆகிய மூவரும் இணைந்து சீன பெண்கள் அணியான ஆன் கிக்சுவான், லீ ஜியாமன் மற்றும் யாங் சியாலி ஆகியோரை வீழ்த்தி 10வது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று உள்ளனர்.
இதுவரை வில்வித்தை போட்டியில், தென் கொரிய பெண்கள் அணியைத் தவிர வேறு எந்த அணிகளாலும் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. ஒலிம்பிக் போட்டி தொடங்கிய கடந்த 1988ஆம் ஆண்டு முதல் இன்று வரை தென் கொரிய பெண்கள் அணி மட்டுமே தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.