தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய அணியில் முகமது ஷமி.. மெகா அப்டேட் கொடுத்த பும்ரா! - BORDER GAVASKAR TROPHY 2025

பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்.

Etv Bharat
Pat Cummins - Jasprit Bumrah (AFP)

By ETV Bharat Sports Team

Published : Nov 21, 2024, 1:40 PM IST

ஐதராபாத்:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (நவ.22) பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதனையொட்டி பார்டர் - கவாஸ்கர் டிராபி முன்பு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸூடன் இணைந்து ஜஸ்பிரித் பும்ரா புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து இருவரும் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர், அப்போது பேசிய பும்ரா, விரைவில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாட வேண்டும் என்பது என்னுடைய சிறு வயது கனவு என்றார். இப்போது இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றார்.

வெற்றியோடு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை தொடங்க வேண்டும் என்பதே அணியின் ஒட்டுமொத்த பிளான் என்று கூறினார். விராட் கோலி பார்ம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பும்ரா, விராட் கோலி மிகப்பெரிய பிளேயர். நான் அவர் கேப்டனாக இருக்கும் போது தான் இந்திய அணியில் அறிமுகமானேன்.

அதனால் அவர் பேட்டிங் பார்ம் குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஒன்றிரண்டு சீரிஸ்கள் ஏற்றம் இறக்கமாக இருக்கலாம். ஆனால் இந்திய அணியில் இருக்கும் பிளேயர்களில் மிகவும் பர்பெக்ட் பிளேயர் என்றால் அது விராட் கோலி தான். அவர் இந்த சீரிஸில் நிச்சயம் சிறப்பாக ஆடுவார் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய பும்ரா, இந்திய அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளர் முகமது ஷமி, அவரை அணி நிர்வாகம் முழுமையாக கவனித்துக் கொண்டிருக்கிறது. இப்போது அவர் பந்தவீச தொடங்கியிருப்பது இந்திய அணிக்கு குட் நியூஸ். பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலேயே அவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

அது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும். எந்நேரமும் முகமது ஷமி ஆஸ்திரேலியா வரலாம் என்று கூறினார். இதன் மூலம் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. காயம் காரணமாக சுமார் ஓராண்டுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஷமி, தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மூலம் இந்திய அணிக்கு திரும்ப உள்ளார்.

இதையும் படிங்க:தக்க சமயத்தில் உதவிய உதயநிதி ஸ்டாலின்... நனவான காசிமாவின் தங்கம் கனவு! தந்தை நெகிழ்ச்சிப் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details