சென்னை:சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் லெஜண்ட்ரி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் (southern superstars) அணிக்கான ஜெர்சி மற்றும் வீரர்கள் அறிமுகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மைக்கேல் பெவன் (ஆஸ்திரேலியா), தினேஷ் கார்த்திக், பார்தீவ் பட்டேல், கேதர் காதவ் மற்றும் நடிகை ஐஸ்வரியா ராஜேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தினேஷ் கார்த்திக் பேசியதாவது, “லெஜண்ட்ரி கிரிக்கெட் ஓய்வு பெற்ற வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் முக்கியமான கிரிக்கெட் தொடராக அமையும். இதன் மூலம் நிறைய திறமைசாளிகளை உருவாக்கவும் முடியும். வரும் காலங்களில் கிரிக்கெட்டில் பெண்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இதனால், பெண்கள் தைரியமாக கிரிக்கெட்டை தேர்வு செய்யலாம்.