தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வரலாறு படைக்க காத்திருக்கும் அஸ்வின்! முதலாவது டெஸ்ட்டில் சாத்தியமாகுமா? - RAVICHANDRAN ASHWIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைக்க இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் காத்திருக்கிறார்.

Ravichandran Ashwin
Ravichandran Ashwin (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 20, 2024, 4:55 PM IST

ஐதராபாத்:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ரோகித் சர்மா முதலாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளாத நிலையில், இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வழிநடத்த உள்ளார்.

அதேநேரம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுப்மன் கில் காயம் காரணமாக முதலாவது போட்டியில் விளையாட மாட்டார். ரோகித், சுப்மன் கில் என இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு அது கூடுதல் வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.

அதேநேரம் பும்ரா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் அதிகளவில் இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளரை மட்டும் பயன்படுத்த பும்ரா திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகையால் முதலாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணியில் அஸ்வின் மட்டுமே சுழற்பந்து வீசுவார் எனக் கருதப்படுகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபி மூலம் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார். இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்தும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைப்பார்.

தற்போது வரை 194 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்திக்ல் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் 187 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். பேட் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகள் கைப்பற்றி 3வது இடத்தில் உள்ளார். 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 536 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

5 விக்கெட் 37 முறையும், 10 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தியும் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் 3 போட்டிகளில் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய தொடரை கைப்பற்றியாக வேண்டும்.

இதையும் படிங்க:ஆண்டில் 2வது முறை.. சாதித்து காட்டிய ஹர்திக்! இது தான்டா கம்பேக்!

ABOUT THE AUTHOR

...view details