தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் மோடிக்கு துப்பாக்கி பரிசளித்த மனு பாக்கர்! பாரீஸ் ஒலிம்பிக் இந்திய அணியுடன் மோடி சந்திப்பு! - PM Modi met India Olympic athletes

By ETV Bharat Sports Team

Published : Aug 15, 2024, 3:12 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகள் பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Etv Bharat
PM Modi met Indian Olympic Contigent (Screen grab image from ANI)

டெல்லி:நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்மையில் பிரான்ஸ் தலைகர் பாரீசில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

பாரீஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் பிரதமர் மோடியை சந்தித்து தங்களது பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து இருவரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் பிரதமர் மோடியிடம் தனது பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், தனது ஏர் பிஸ்டல் துப்பாக்கியை பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக மனு பாக்கர் வழங்கினார். இருவரும் தங்களுக்குள்ளான அனுபவங்களை பகிர்ந்து சிரித்து மகிழ்ந்தனர்.

இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக கொடுத்தனர். அதேபோல், பாரீஸ் ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்ததில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையும் படிங்க:சுதந்திர தினத்தில் ஓய்வை அறிவித்த 2 இந்திய ஜாம்பவான்கள்! ஆக.15ல் ஓய்வை அறிவிக்க என்ன காரணம்? - 15th August retirement

ABOUT THE AUTHOR

...view details