சென்னை:சென்னையில் வரும் 25 ஆம் தேதி (ஜன.25) நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்கானி டிக்கெட் விற்பனை இன்று (ஜன.12) தொடங்குவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டியிலும் மூன்று 50 ஓவர் போட்டியிலும் விளையாட உள்ளது.
இதில் 2வது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், 'டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும்,1500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'C,D,I,J மற்றும் E லோயர் டயர் ஸ்டாண்ட், K அப்பர் டயர் ஸ்டாண்ட் 1500 ரூபாய்க்கும், I,J,K லோயர் டயர் ஸ்டாண்ட் 2500 ரூபாய்க்கும், KMK டெரஸ் ஸ்டாண்ட் 5000 ரூபாய்க்கும், C,D,E (A/C) ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ் ஸ்டாண்ட் 10 ஆயிரம் ரூபாய்க்கும், H (A/C) ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ் ஸ்டாண்ட் 15 ஆயிரம் ரூபாய்க்கும், I,J (A/C) ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ் ஸ்டாண்ட் 12 ஆயிரம் ரூபாய்க்கும் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
போட்டிக்கான டிக்கெட்களை ‘District by Zomoto’ என்ற செல்ஃபோன் செயலி மூலமாகவோ அல்லது http://district.in என்ற இணையதளம் மூலமாகவோ வாங்கலாம். அதேபோல போட்டியை காண வரும் ரசிகர்கள் தங்களுடைய நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கம், விக்டோரியா ஹாஸ்டல் சாலை, ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி வளாகம், சேப்பாக்கம் ரயில்வே கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் தங்களுடைய வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது