ஹைதராபாத்:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்றிரவு ஹைதராபாத்தில் 50 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்தன.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதலாவதாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா 12 ரன்கள் எடுத்த நிலையில், இருவரும் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அன்மோல்பிரீத் சிங்கும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, 3 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி, டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து பவர் பிளே ஆட்டத்தில், முதல் 6 ஓவர்களில் 37 ரன்களை குவித்தனர். இதையடுத்து களத்தில் இவ்விருவரின் கூட்டணியும், சுழற்பந்து வீச்சாளார் யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்துகளை சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறக்க விட்டனர். சாஹலுக்கு இது அவரது 300வது ஆட்டமாகும்.
பின்னர் 20 ஓவரின் முடிவில், டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில், 3 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 131 ஆக ஸ்கோரரை உயர்த்தியிருந்தார். இவரையடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் - நிதிஷ்குமாரின் கூட்டணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமார்த்தியமாக ஆடியதால் ஸ்கோர் 200-ஐத் தாண்டியது. 20 ஓவர் முடிவில், ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்திருந்தது.