சென்னை: 2024 ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனின் 7வது போட்டி, இன்று (மார்ச் 26) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும், இதுவரை தலா 1 போட்டி விளையாடி அதில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முறையே 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி பெங்களூரு அணியையும், குஜராத் அணி மும்பை அணியையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இரு அணிகளும் தனது 2வது போட்டியை விளையாடுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11