ஹைதராபாத்:17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் முதல் 4 இடங்களைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் 57வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொண்டு வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் ஆகியோர் களமிறங்கினர். இதில் டிகாக் 2 ரன்னுக்கும், மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்னுக்கும் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய குர்னல் பாண்டியா, கேப்டன் ராகுல் உடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இதில் 27 ரன்கள் எடுத்து இருந்த ராகுல், பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.