சென்னை :இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. இதில், முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 19ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி செப்டம்பர் 27ம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி ஆட்டம் இன்று(செப் 16) சென்னையில் நடைபெற்றது. இதில், இரு அணி வீரர்களும் தனித்தனியாக பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணி சார்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் ஜஸ்பிரித் பும்ரா போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்படு பின்னர் அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது தீவிர பந்து வீச்சிலும் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணி ஒருபுறம் பயிற்சியில் ஈடுபட்டாலும், வங்கதேச அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.