ஹராரே: இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.7) ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (100 ரன்) சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது கன்னி சதத்தை விளாசினார். அதேபோல் மற்ற வீரர்கள் ரூதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களும், ரிங்கு சிங் 48 ரன்களும் விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர்.
தொடர்ந்து 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடியது. இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜிம்பாப்வே அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. தொடக்க வீரர் இன்னசென்ட் கையா 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் களமிறங்கிய பிரையன் பென்னட் மற்றொரு தொடக்க வீரர் வெஸ்லி மாதவெரேவுடன் இணைந்து சிறிது நேரம் இருவரும் விளையாடினர். இருப்பினும் நேர்த்தியாக பந்துவீசிய அவெஷ் கான் மற்றும் முகேஷ் குமார் அடுத்தடுத்து ஜிம்பாப்வே விக்கெட் வரிசையை காலி செய்து கடும் நெருக்கடி கொடுத்தனர்.
வெஸ்லி மாதவெரே கடைசி வரை போராடி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். ஜிம்பாப்வே அணி 18 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரையன் பென்னட் (26 ரன்), வெஸ்லி மாதவெரே (43 ரன்) ஆகியோர் மட்டும் ஜிம்பாப்வே அணியில் சொல்லிக் கொள்ளும் அளவில் விளையாடினர்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அவெஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 10ஆம் தேதி இதே ஹரேரா மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:ஜிம்பாப்வே 235 ரன்கள் வெற்றி இலக்கு! கன்னி சதத்தை விளாசிய அபிஷேக் சர்மா! - Ind vs Zim 2nd T20 Cricket