தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

SAW VS INDW; 2வது டி20 தொடரில் வெற்றியை ருசிக்குமா இந்திய மகளிர் அணி? - SAW VS INDW 2nd t20I match 2024 - SAW VS INDW 2ND T20I MATCH 2024

SAW VS INDW: இந்திய மகளிர் அணி - தென்னாப்பிரிக்க மகளிர் அணி இடையேயான 2வது டி20 தொடர் இன்று இரவு 7 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி (Credits - IANS)

By PTI

Published : Jul 7, 2024, 5:51 PM IST

சென்னை: தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ்மின் பிரிட்ஸ் மற்றும் மரிசான் கேப் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்குகிடையேயான 2வது டி20 தொடர் இன்று மாலை 7 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளும் நேரடியாக மொத்தம் 17 முறை டி20 போட்டியில் மோதிக் கொண்டனர். அதில், இந்திய மகளிர் அணி மொத்தம் 9 முறை வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க மகளிர் அணி 6 முறை வெற்றி பெற்றுள்ளது.

மேலும், 2 போட்டிகளுக்கு ரிசல்ட் இல்லை. அதேபோல், இவ்விரு அணிகளுக்கு இந்தியாவில் மட்டும் நேரடியாக 9 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் இந்திய மகளிர் அணி 5 முறையும், தென்னாப்பிரிக்க மகளிர் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய மகளிர் அணி - தென்னாப்பிரிக்க மகளிர் ஆகிய இரு அணிகளும் நேரடியாக மோதிக்கொண்ட டி20 போட்டிகளில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மட்டும் இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 352 ரன்களையும், தென்னாப்பிரிக்க மகளிர் அணி வீரர் லிசிலி லி 13 போட்டிகளில் விளையாடி 334 ரன்களையும், சுனி லுஸ் 15 போட்டிகளில் விளையாடி 308 ரன்களையும் குவித்தனர்.

அதேபோல், இந்திய மகளிர் அணி - தென்னாப்பிரிக்கா மகளிர் அணி ஆகிய இரு அணிகளும் நேரடியாக மோதிக்கொண்ட டி20 போட்டிகளில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சார் ஷப்னிம் இஸ்மாயில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும், இந்திய மகளிர் அணி பந்துவீச்சாளர் பூனம் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 12 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், 2வது டி20 தொடர் இன்று மாலை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க:டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு! தோல்விக்கு பழிதீர்க்குமா? - Ind vs Zim 2nd T20

ABOUT THE AUTHOR

...view details