தம்புள்ளை:ஆசிய மகளிர் கோப்பைக்கான டி20 போட்டி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நேபாள மகளிர் அணியும், இந்திய மகளிர் அணியும் இன்று (ஜூலை 23) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஷஃபாலி வர்மா - ஹேமலதா ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் ஷாஃபாலி வர்மா இரு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இருவரும் போட்டி போட்டு பவுண்டரிகளை விளாசினர். 5 ஓவர் முடிவிற்கு 48-0 என்ற கணக்கில் இந்திய அணி விளையாடியது. 8வது ஓவரில் ஷாஃபாலி வர்மா தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில் தான் ரானா வீசிய பந்தைச் சமாளிக்க முடியாமல் ஹேமலதா அவுட் ஆனார். ஹேமலதா 42 பந்துகளுக்கு 47 ரன்கள் குவித்தார். அதன்பின் சஞ்சனா களம் கண்டார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷஃபாலி வர்மா போல்ட் ஆனார். பின்னர் ஜெமிமா களம் கண்டு பவுண்டரிகளை விளாச, இதற்கிடையில் சஞ்சனா எல்பிடபிள்யூ ஆனார். பின்னர், ரிச்சா கோஷ் களம் கண்டார். இந்திய அணிக்கு 20 ஓவரில் 3 பவுண்டரிகள் கிடைத்தன. 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களைக் குவித்தது.