தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரிஷப் பன்ட் சம்பளம் ரூ.27 கோடி இல்ல.. வரி பிடித்தம் போக எவ்வளவு வாங்குவார் தெரியுமா? - RISHABH PANT IPL SALARY

ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ரிஷப் பன்ட் வரிப் பிடித்தம் போக எவ்வளவு தொகையை சம்பளமாக பெறுவார் என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
Rishabh Pant (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 27, 2024, 4:04 PM IST

ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டை அதிகபட்சமாக 27 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கைப்பற்றியது.

ஐபிஎல் ஏல வரலாற்றி அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற சிறப்பை ரிஷப் பன்ட் பெற்றார். வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக தொகை சம்பளம் வாங்கும் வீரராக ரிஷப் பன்ட் இருப்பார். 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பன்ட் லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்ட போது, அவருக்கு முழுத் தொகையும் போய் சென்றடையாது.

வரிப் பிடித்தம் உள்ளிட்ட இதர பணிகள் போக குறிப்பிட்டத் தொகை மட்டுமே அவருக்கு ஊதியமாக வழங்கப்படும். அப்படி ரிஷப் பன்ட் எவ்வளவு தொகையை ஊதியமாக பெறுவார் என்பது குறித்து காணலாம். ரிஷப் பன்ட்டின் ஒட்டுமொத்த ஒப்பந்த தொகையான 237 கோடி ரூபாயில் 8 கோடியே 1 லட்ச ரூபாயை அவர் வரியாக இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.

இந்திய அரசின் வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் படி ரிஷப் பன்ட் வரியாக மட்டுமே 8 கோடியே 1 லட்ச ரூபாயை தனது ஒப்பந்த தொகையில் இருந்து செலுத்த வேண்டும் என்பது விதியாகும். ஆகையால் ஒட்டுமொத்த ஒப்பந்த தொகையான 27 கோடி ரூபாயில் இருந்து 8 கோடியே 1 லட்ச ரூபாயை கழித்து ஒரு சீசனுக்கு 18 கோடியே 9 லட்ச ரூபாய் மட்டும் ரிஷப் பன்ட் திரும்பப் பெற முடியும்.

அதேநேரம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களும் இந்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அவர்களது ஊதியமும் வரி செலுத்துதலுக்கு பின்னரே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பன்ட்டை 20 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு டெல்லி அணி தக்கவைக்க முயன்றது.

ஆனால் இடையில் புகுந்த லக்னோ அணி, தடாலடியாக 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பன்ட்டை தங்கள் அணிக்கு ஏலத்தில் எடுத்தது. 18வது ஐபிஎல் சீசனில் லக்னோ அணியை ரிஷப் பன்ட் கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காயம் காரணமாக இந்திய வீரர் விலகல்? 2வது டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பின்னடைவு?

ABOUT THE AUTHOR

...view details