ஐதராபாத்:இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் முக்கியத்தக்க நபராக கருதப்படுகிறார் சுப்மான் கில். இந்திய அணியில் சுப்மான் கில்லின் வருகைக்கு பின்னர் ஷிகர் தவான், கேஎல் ராகுல் ஆகியோரின் ஓபனிங் வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின. அந்த அளவுக்கு திறமையான ஆட்டத்தின் மூலம் சுப்மான் கில் இந்திய அணியில் தனது இருப்பிடத்தை நிலையானதாக கொண்டு உள்ளார்.
பொதுவாக, போட்டிக் கட்டங்களை விட விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப் மூலம் இந்திய வீரர்கள் நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் சுப்மான் கில்லும் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகிறார். இது தவிர சில தனியார் நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் சுப்மான் கில் இருந்து வருகிறார்.
இந்திய அணியின் அதிக வருவாய் ஈட்டும் நபராக விராட் கோலி இருந்து வருகிறார். 1000 கோடி ரூபாய்க்கு மேல் விராட் கோலியின் நெட் வொர்த் உள்ளது. விளம்பரம், ஸ்பான்சர்ஷிப் மூலம் வருவாய் ஈட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் தோனி 700 கோடி ரூபாய் நெட் வொர்த் கொண்டுள்ளார்.
இந்நிலையில், வளர்ந்து வரும் வீரரான சுப்மன் கில்லின் வருவாய் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சுப்மான் கில் தனியார் விளம்பரங்கள் மூலம் பல லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறார். இது தவிர சியட் நிறுவனத்தின் பேட் ஸ்பான்சர்ஷிப்பை சுப்மான் கில் கொண்டு உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சியட் நிறுவனம் சுப்மான் கில்லுடன் விளம்பர ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதன்படி, சுப்மன் கில்லின் கிரிக்கெட் பேட்டில் சியட் நிறுவனத்தி ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ள ஆண்டுக்கு 2 முதல் 5 கோடி ரூபாய் வரை வழங்குவதாக சொல்லப்படுக்கிறது. 2018ஆம் ஆண்டு முதல் சியட் நிறுவனம் சுப்மன் கில்லுக்கு பேட்டிங் ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. அதேநேரம் விராட் கோலியின் பேட் ஸ்பான்சர்ஷிப்பை ஒப்பிடுகையில், சுப்மான் கில் பெறுவது மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது.
எம்ஆர்எப் நிறுவனம் விராட் கோலிக்கு பேட் ஸ்பான்சர்ஷிப் மூலம் ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வரை வழங்குவதாக சொல்லப்படுகிறது. விராட் கோலிக்கு ஆண்டுக்கு 12 கோடியே 50 லட்ச ரூபாய் வீதம், 8 ஆண்டுகளுக்கு பேட் ஸ்பான்சர்ஷிப்பிற்காக எம்ஆர்எப் நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த படியாக ரோகித் சர்மாவுக்கு இதே சியட் நிறுவனம் ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் பேட் ஸ்பான்சர்ஷிப் மூலம் தொகை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரு ஸ்டிக்கருக்கு இத்தனை கோடியா? பேட் ஸ்பான்ஷர்ஷிப் மூலம் ரோகித் சர்மா பெறும் தொகை எவ்வளவு தெரியுமா? - Rohti Sharma Bat Sponsorship