ஹைதராபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடக்கும் 9வது டெஸ்ட் போட்டி ஆகும். அதேபோல் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கும் 6வது டெஸ்ட் போட்டியாகும். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய பங்கு வகிக்கும்.
இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாகக் காட்சியளிக்கிறது. கோலி விளையாடாத நிலையில், ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் டாப் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். மிடில் ஆர்டரில் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.