தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

துலிப் கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா இல்லாத அணி அறிவிப்பு! என்ன காரண்ம்! - Duleep Trophy Squad - DULEEP TROPHY SQUAD

துலிப் கோப்பை தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அதில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் இஷான் கிஷன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

Etv Bharat
Rohit Sharma and Virat Kohli (IANS)

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 6:53 PM IST

ஐதராபாத்: 2024-25ஆம் ஆண்டுக்கான துலிப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய ஆண்கள் அணி தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், துலிப் கோப்பைக்கான அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.

செப்டம்பர் 5ஆம் தேதி துலிப் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், நடப்பு சீசனுக்கான போட்டிகள் அனந்தபூர், ஆந்திர பிரதேசம் மற்றும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துலிப் கோப்பை தொடருக்கான நான்கு அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

வீரர்கள் விவரம் வருமாறு:

ஏ அணி: சுப்மான் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கே.எல்.ராகுல், திலக் வர்மா, சிவம் துபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷஸ்வத் ரவாத்.

பி அணி:அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என்.ஜகதீசன் (விக்கெட் கீப்பர்).

சி அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதார், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே ஆர்யன் ஜூயல் (விக்கெட் கீப்பர்) சந்தீப் வாரியர்.

டி அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), சௌரப் குமார்.

இதில் பி அணியில் உள்ள நட்சத்திர வீரர் நிதிஷ் குமார் ரெட்டில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் துலிக் கோப்பை தொடரில் அவர் விளையாடுவது இறுதியில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளதால், விராட் கோலி, பும்ரா, ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

அதேநேரம் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வாகி உள்ள வீரர்களுக்கு பதிலாக துலிப் கோப்பை தொடரில் மாற்று வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என தேர்வு குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல் நியமனம்! - Morne Morkel

ABOUT THE AUTHOR

...view details