தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

UTT 2024: தியா சித்தலேவின் அபார ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது டெல்லி அணி! - Ultimate Table Tennis 2024 - ULTIMATE TABLE TENNIS 2024

Ahmedabad vs Delhi: சென்னையில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸில் தொடரில், தியா சித்தலேவின் அபாரமான ஆட்டத்தால் அகமதாபாத் அணியை வீழ்த்திய டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டென்னிஸ் வீராங்கனைகள்
டென்னிஸ் வீராங்கனைகள் (Credits - UTT)

By ETV Bharat Sports Team

Published : Sep 7, 2024, 7:14 AM IST

சென்னை:அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில், டெல்லி அணி 8-6 என்ற கணக்கில் அறிமுக அணியான அகமதாபாத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

  • முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரனும், அகமதாபாத் அணியின் லிலியன் பார்டெட்டுடன் மோதினார். இதில் லிலியன் பார்டெட் 2-1 (11-4, 5-11, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
  • 2வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி அணியின் ஓரவன் பரனாங், அகமதாபாத் அணியின் பெர்னாடெட் சோக்ஸுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஓரவன் பரனாங் 3-0 (11-7, 11-9, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
  • தொடர்ந்து, 3வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன் - ஓரவன் பரனாங் ஜோடியானது அகமதாபாத் அணியின் மனுஷ் ஷா, பெர்னாடெட் சோக்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில், சத்தியன் ஞானசேகரன் - ஓரவன் பரனாங் ஜோடி 0-3 (9-11, 7-11, 9-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
  • 4வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி அணியின் ஆன்ட்ரியாஸ் லெவன்கோ, அகமதாபாத் அணியின் மனுஷ் ஷாவை எதிர்கொண்டார். இதில் ஆன்ட்ரியாஸ் லெவன்கோ 2-1 (11-8, 10-11, 11-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
  • கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றை பிரிவு ஆட்டத்தில் டெல்லி அணியின் தியா சித்தலே, அகமதாபாத் அணியின் ரீத் ரிஷ்யாவுடன் மோதினார். இதில் தியா சித்தலே 2-0 (11-8, 11-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முடிவில் டெல்லி அணி 8-6 என்ற செட் கணக்கில் அறிமுக அணியான அகமதாபாத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில், இன்று (செப்.7) நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கோவா அணியும், டெல்லி அணியும் மோதுகிறது.

ABOUT THE AUTHOR

...view details