விசாகபட்டினம் :17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் இன்று (ஏப்.3) இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணியின் இன்னிங்சை பிலிப் சால்ட், சுனில் நரேன் ஆகியோர் தொடங்கினர். அடித்து விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தனர். பிலிப் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேனுடன் அங்கிருஷ் ரகுவன்ஷி கைகோர்த்தார்.
இருவரும் அடித்து விளையாடி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். குறிப்பாக சுனில் நரேன் அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடியை மிட்செல் மார்ஷ் பிரித்தார். அவரது பந்தில் சுனில் நரேன் தலா 7 பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி 85 ரன்கள் குவித்தார்.
டெல்லி பந்துவீச்சை மிக எளிதாக கையாண்ட கொல்கத்தா வீரர்க்ள் மைதானத்தில் வர்ணஜாலம் நிகழ்த்தினர். அங்கிருஷ் ரகுவன்ஷி 54 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன் ஆகியோர் தங்கள் பங்குக்கு ரன் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் கைகோர்த்த ரின்கு சிங், ஆந்திர ரஸ்செல் ஜோடி டெல்லி பந்துவீச்சை துவம்சம் செயதது.
அதிரடியாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இருவரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி 250 ரன்களை கடந்தது. 3 சிக்சர்கள் விளாசி அபாரமாக விளையாடிய ரின்கு சிங் (26 ரன்) 19வது ஓவரின் இறுதியில் ஆட்டமிழந்து வெளியேறினார்.