ஐதராபாத்: UEFA தேசிய லீக் தொடர் குரூப் பிரிவு லீக் ஆட்டத்தில் குரேஷியா - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற இந்த போட்டியில் தான் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது வரலாற்று சாதனையை நிறைவேற்றி உள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குரேஷியா அணியை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வீழ்த்தியது.
இதில் ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். அதன் மூலம் கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். போர்ச்சுகல் தேசிய அணிக்காக மட்டும் ரொனால்டோ இதுவரை 131 கோல்கள் அடித்து உள்ளார். மீதமுள்ள கோல்கள் அனைத்தும் உலகம் முழுவதும் அவர் விளையாடி வரும் பல்வேறு கிளப்புகளுக்காக அடித்த கோல்களாகும்.
இரண்டாவது இடத்தில் யார்?
பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி ரொனால்டோ அந்த அணிகளுக்காக இதுவரை 769 கோல்கள் அடித்துள்ளார். ரொனல்டோவுக்கு அடுத்தபடியாக கால்பந்தின் தி கோட் என்று அழைக்கப்படும் மெஸ்ஸி உள்ளார். தேசிய அணி உள்பட பல்வேறு கிளப்புகளுக்காக விளையாடி உள்ள மெஸ்சி அதில் மொத்தம் 842 கோல்கள் அடித்துள்ளார்.
அதேநேரம், பிரேசில் வீரர் பீலே ஒட்டுமொத்தமாக 765 கோல்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். கால்பந்து விளையாட்டில் 900 கோல்கள் அடித்தது குறித்து பேசிய ரொனால்டோ, "நீண்ட நாட்களாக நான் அடைய விரும்பிய மைல்கல் இது. அந்த இலக்கை அடைவேன் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் தொடர்ந்து விளையாடும்போது, அது இயல்பாக நடக்கும்.
10 லட்சம் பாலோவர்ஸ்:
இது ஒரு மைல்கல் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறேன். இதை வேறு எந்த சாதனையுடன் ஒப்பிட முடியாது. கால்பந்து விளையாட்டில் 900 கோல்கள் என்ற மைல்கல்லை அடைவது எவ்வளவு கஷ்டம் என்று அனைவரும் அறிந்திருக்க முடியும். 900 கோல்களை அடித்தது எனது வாழ்க்கையில் சிறந்த மைல்கல்.
கால்பந்தில் ஆயிரம் கோக்களை அடிப்பதே எனது இலக்கு. தற்போது 900 கோல்கல் என்ற இலக்கை எட்டியுள்ளேன் விரைவில் ஆயிரம் கோல்களை அடிப்பேன் என்று நம்புகிறேன் என ரொனால்டோ தெரிவித்தார். அண்மையில் யுடியூப் சேனல் தொடங்கிய ரொனால்டோ அதிவிரைவில் 10 லட்சம் சந்தாதாரர்களை பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:IPL in LOSS: சன்ரைசஸ் ஐதராபாத் வருவாய் 138% உயர்வு! நஷ்டத்தில் ஐபிஎல்? எப்படி நடந்தது? - Kavya Maran