தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"ஆர்சிபிக்கு அவரை இழுக்க ரூ.20 கோடி வேணும்"- அஸ்வினின் பேச்சால் மீண்டும் சூடுபிடிப்பு!

பெங்களூரு அணியில் அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டுமானால், குறைந்தது 20 கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டும் என்று தமிழக வீரர் அஸ்வின் நகைச்சுவையாக கூறியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Virat Kohli - Rohit Sharma (IANS Photo/ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Oct 14, 2024, 4:53 PM IST

ஐதராபாத்:ஆன்லைன் மூலம் ரசிகரிடையே கலந்துரையாடிய தமிழக வீரர் அஸ்வின், ஒரு கேள்விக்கு அளித்த பதில் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியுடன், ரோகித் சர்மாவும் இணைந்தால் எப்படி இருக்கும்.

இருவரும் ஒன்றாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் களமிறங்கினால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும். மைதானத்தில் குழுமியிருக்கும் ரசிகர்கள் எழுப்பும் சத்தம் காதுகளை கிழித்து விண்ணை பிளக்கும் அளவுக்கு பயங்கரமானதாக இருக்கும் என்றார். 2025 ஐபிஎல் சீசனில் இரண்டு ஜாம்பவான்களும் ஒன்றாக விளையாடினால் பெங்களூரு அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என்றார்.

இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த அஸ்வின், பெங்களூரு அணியில் ரோகித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால் 20 கோடி ரூபாய் வரை அணி நிர்வாகம் செலவழிக்க வேண்டி இருக்கும். ரோகித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய அவருக்கு 20 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருக்கும் என்று அஸ்வின் கூறினார்.

அண்மையில் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், ஆர்சிபி அணியில் ரோகித் சர்மா இணைந்தால் எப்படி இருக்கும், ஆனால் நடக்காத விஷயங்களை பேசி ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று தெரிவித்து இருந்தார். இருப்பினும், அவரது பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

கடந்த சீசனில் மிக மோசமாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றின் முடிவிலேயே பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. மேலும், ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிடம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக கூட மும்பை அணி படுதோல்வியை சந்தித்த சொல்லப்பட்டது.

மேலும், மோசமான ஒரு சீசன் காரணமாக அணியை மறுசீரமைப்பு செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாகவும் அதனால் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என தகவல் பரவியது. 2011ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்துள்ளார்.

அதேநேரம் அவர் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆர்சிபி அணியால் ஏலம் எடுக்கப்படும் பட்சத்தில் ரோகித் சர்மாவின் ஐபிஎல் அணுபவம் மூலம் பெங்களூரு அணி தனது முதல் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது வீரர் தக்கவைப்பு மற்றும் வெளியேற்றுதல் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாள் கூடிய சீக்கிரத்தில் முடிவு தெரிய்வரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:டாப் கிளாமரஸ் கிரிக்கெட் வீராங்கனைகள்! பட்டியலில் இந்திய வீராங்கனை பெயரும் இருக்கு! Glamorous female cricketers

ABOUT THE AUTHOR

...view details