மும்பை:மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேசத்தில் உள்நாட்டு கலவரம் நிலவி வரும் நிலையில், அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டது. இது தொடர்பாக பிசிசிஐயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்தாது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் . மேலும் அடுத்த ஆண்டு ஒரு நாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துவதால் அடுத்தடுத்து இரண்டு உலகக் கோப்பையை நடத்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.