தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

FACT CHECK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவிடம் தோற்றதால் பாகிஸ்தான் வீரர் அழுதாரா? உண்மை என்ன? - FACT CHECK

ஐசிசி சான்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், உடை மாற்றும் அறையில் அழுத்ததாக செய்தி வெளியானது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் வீரர் அழும் புகைப்படம்
பாகிஸ்தான் வீரர் அழும் புகைப்படம் (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2025, 5:34 PM IST

ஹைதராபாத்: ஐசிசி சான்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், உடை மாற்றும் அறையில் அழுத்ததாக செய்தி வெளியானது. ஆனால், அது உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.

வெளியான செய்தி:ஐசிசி சான்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபக்கர் ஜமான், உடை மாற்றும் அறையில் அழுத்ததாக செய்தி வெளியானது

உண்மை தன்மை:இது தவறான செய்தியாகும். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபக்கர் ஜமான் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், வருத்தத்தில் அவர் அழுதது தான் உண்மை.

திங்கட்கிழமை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025ஆம் ஆண்டு போட்டியில் நியூசிலாந்து அணி, வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து வெளியேறியது. முன்னதாக துபாயில் நடந்த போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது. ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால், தம்மால் அரையிறுதியில் பங்கேற்க முடியும் என்று பாகிஸ்தான் நம்பி இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. என்ன தெரியுமா?

இந்த நிலையில், இந்தியாவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபக்கர் ஜமான், உடை மாற்றும் அறையில் அழுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. வீடியோவில் பாகிஸ்தான் அணியின் வீரர் அழுகிறார். அவரை சக அணி வீரர்கள் தேற்றுகின்றனர். இந்த வீடியோவை ஒரு இன்ஸ்டாகிராம் பதிவர் பதிவு செய்து, இந்தியாவிடம் தோற்றதால் அழும் பாகிஸ்தான் வீரர் என்று தலைப்பிட்டு இருந்தார்.

உண்மை தன்மை:

இது தவறாக வழி நடத்தும் வீடியோவாகும். வீடியோவில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபக்கர் ஜமான் கண்ணீர் விட்டு அழுவது உண்மை தான். ஆனால், காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த வருத்தத்தில் தான் அவர் அழுகிறார். சக வீரர்கள் அவரை தேற்றுகின்றனர்.

வைரல் ஆன படத்தைக் கொண்டு இணையத்தில் தேடிய போது ஆங்கில நாளிதழ் ஒன்றின் இணையதளத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்ததன் காரணமாக ஃபக்கர் ஜமான் வெளியேற்றப்பட்டது குறித்தும், அதனால் அவர் அழுதது குறி்த்தும் பிப்ரவரி 21ஆம் தேதி செய்தி வெளியாகி இருந்தது தெரிய வந்தது. பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஆங்கில இணையதளம் ஒன்றிலும் இந்த உண்மை தகவல் இடம் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details