மேஷம்: வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய இடையூறானது நீங்குவதைக் காண்பீர்கள். உடல்நலப் பிரச்சினைகளால் துன்பப்படுபவர்கள் உடல்நலனில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக அமையும். தொழில் மற்றும் வியாபரத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் காணலாம். வேலை தேடுபவர்கள் புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்து ஸ்திரத்தன்மையை அடைவார்கள். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். மேலும், காதல் துணையுடனான அன்பு வலுவாக வளரும்.
ரிஷபம்: இந்த வாரம் முழுவதும் அனாவசியமான சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. வாரத்தின் தொடக்கத்தில், நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் அதிகமாக எதிர்ப்பை சந்திக்க நேரிடும். அதேபோல, எந்தவொரு சொத்து அல்லது கட்டிடம் தொடர்பான தகராறுகளை நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து அப்பிரச்சனையை தீர்ப்பது புத்திசாலித்தனம். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், கொடுக்கல் வாங்கலின் போது எச்சரிக்கை தேவை.
மிதுனம்: வரவிருக்கும் வாரம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி, செல்வம் மற்றும் சாதனைகளை அள்ளித் தரும் வரமாகும். வாரத்தின் தொடக்கத்தில், தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பாசிட்டிவான ஊக்கமளிக்கும் தகவல்களைப் பெறலாம். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு போன்றவற்றிற்காக ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு, அவர்களின் கனவுகள் இந்த வாரம் நனவாகும். வேலையில்லாத நபர்கள், அவர்கள் மனதுக்குப் பிடித்த வேலையில் அமர்வார்கள். வார இறுதியில், குடும்ப சொத்து தொடர்பான பிரச்சனை செல்வாக்கு மிகுந்த ஒரு பெரிய நபரின் உதவியுடன் தீர்க்கப்படலாம்.
கடகம்: உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். நீங்கள் வேறு ஒரு வேலைக்கு மாற வேண்டும் என மனதில் நினைத்திருந்தால், அதற்கான சிறந்த வாய்ப்புகள் இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கலாம். வார இறுதியில், நீங்கள் உத்தியோக நிமித்தமாக பயணத்தை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் இந்த நேரத்தில் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் காதல் துணையை விடுப் பிரிந்திருப்பதால் அல்லது அவர்களைப் பார்க்க முடியாததால், சற்று நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள்.
சிம்மம்: உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களின் பணியிடத்தில் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான வெற்றிகளை பெற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருமானத்திற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள் மற்றும் சமுதாயத்தில் அவர்களின் அந்தஸ்து உயரும். எதிர்பாராமல் பணவரவு அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்க வேண்டும் என்ற உங்கள் கனவு நனவாகும். இந்த வாரம், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சிகள், அல்லது திருப்புமுனைகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும். உங்கள் இல் வாழ்க்கை எப்போதும் போல் மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி: உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். வேலைவாய்ப்புக்கான தேடலானது மிகவும் சிக்கலானதாகி, சாத்தியமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் கவனம் செலுத்துவது முக்கியம். நீங்கள் சொத்து மற்றும் நிலம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பண விஷயங்களிலும் சில பின்னடைவுகளையும் சந்திக்க நேரிடும். உங்கள் காதல் துணை அல்லது வாழ்க்கைத் துணைக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதல்களை சரிசெய்ய திறந்த மனதுடன் மனம் விட்டுப் பேசுவது சிறந்த பலனை அளிக்கும்.