மேஷம்: உத்யோகத்தை விடுவது குறித்து சட்டென்று முடிவெடுக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு சில நஷ்டங்கள் ஏற்படலாம். இந்த வாரம் தொழில் முனைவேருக்கு யோகமான வாரம். மாணவர்கள் படிக்கும் போது கவனக் குறைவாக இருக்காதீர்கள். தவறினால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இந்த வாரத்தில் நீங்கள் அனாவசியமான விஷயங்களுக்காக பணத்தை ஒதுக்கீடு செய்வீர்கள். உங்களுடைய காதல் உறவில் சில சிக்கல்கள், மன வேற்றுமைகள் காணப்படலாம். இது இருவரிடையே நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்கலாம். இதற்காக நீங்கள் பின்னாளில் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகலாம்.
ரிஷபம்:உத்தியோகத்தில் இருப்பவர்கள், உங்களுடைய பாசிட்டிவ்வான குணம் உங்களுடைய எல்லாப் பணியையும் சிறப்பாக நிறைவேற்ற உதவும். அதே சமயத்தில் எதிர்மறையான குணநலன்கள் உங்கள் திறமையை குறைத்துக் காட்டக்கூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு யோகமான கால கட்டம். அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். இதைப் புறக்கணிக்க வேண்டாம். இது நாள்பட நாள்படப் பெரிய பிரச்சினையாக மாறலாம்.
பிரயாணங்களினால் நீங்கள் சோர்வடையலாம். உங்களுடைய குறிப்பிட்ட பணிகளுக்காக கடன் தேவையாக இருக்கும் பட்சத்தில், அது உடனடியாக உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் திண்டாடுவார்கள். ஆனால், ஏதாவது போட்டித் தேர்வுகளுக்காக தயாராகுபவர்கள், அதில் வெற்றி பெறுவார்கள். காதல் உறவில் இருவருக்கும் இடையே பிரிவு அதிகரிக்கலாம். இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.
மிதுனம்: புது வேலைக்காக முயற்சி செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளவும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அனைத்தும் சாதகமாகவே இருக்கும். உங்கள் வீட்டைப் புதுப்பிக்க நினைத்தால், வேலை துவங்குவதற்கு முன்பாக அதற்கான வரவு, செலவுகளை முன்கூட்டியே திட்டமிடவும். மாணவர்களின் கல்விக்காக செலவிடும் நேரம் மிகக் குறைவாகவே இருக்கும். பலவித காரணங்களினால் மன உளைச்சல் உருவாகலாம். உங்கள் காதல் துணையின் நடத்தை உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
கடகம்: நீங்கள் ஒரு புதிய திட்டத்தில் இணைந்து பணியாற்றுவீர்கள். அதில் உங்கள் தனித்துவம் சிறப்பாக வெளிப்படும். இதனால் உங்கள் மேலதிகாரியின் பார்வை உங்கள் மீது படும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான காலகட்டம். உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த நபர்களுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படும்.
உங்கள் உணவுப்பழக்கத்தில் கவனமாக இருங்கள். அப்படி இல்லை என்றால் தலை, வயிறு அல்லது தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. படிப்பில் முன்னேற மாணவர்கள் அதிகம் முயற்சி செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஒரு புதிய காதல் உறவை, தேடிக்கொள்ளலாம்.
சிம்மம்: இந்த வாரம் நற்பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, தங்களின் பணிகளில் வெற்றி பெற அதிக முயற்சியும் கடின உழைப்பும் தேவைப்படும். இந்த வாரம் உங்களின் குறிக்கோளை அடைய முடியாமல் பல தடைகளை சந்திப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட பணிகளுக்காக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம்.
அதே சமயம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய இது சரியான தருணம் இல்லை. உங்கள் கால்கள், தலை மற்றும் வயிற்றில் உங்களுக்கு சில உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ஈகோவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். இல்லையெனில் உங்கள் உறவு பாதிக்கப்படலாம்.
கன்னி:இந்த வாரம் வியாபார விஷயங்களுக்காக அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் கடினமான ஒன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பராமரிக்க தொடர்ந்து யோகா பயிற்சி செய்யுங்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கக் கூடும்.
வீட்டைப் புதுப்பிப்பதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். அதே நேரத்தில், இந்த வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பலன்களை அடைய அவர்களின் படிப்புக்காக மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத விஷயங்களால் காதல் உறவுக்குள் மனக்கசப்பு ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் எங்காவது வெளியே செல்லலாம்.
துலாம்:பணியிடத்தில் தங்களுடைய சக ஊழியர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் மேலதிகாரிகளுடன் இப்போது வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், வியாபாரத்தில் சிரமங்கள் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
நிலம் அல்லது சொத்தை வாங்க நினைத்தால் அதை செயலாற்றுவதற்கு முன், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் தங்கள் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அந்த நேரத்தில் தேவையற்ற கவனச்சிதறல்களிலிருந்து தங்கள் மனதை திசை திருப்ப வேண்டும். காதல் உறவில் ஒரு விதமான பதற்றம் ஏற்படலாம்.
விருச்சிகம்: வியாபாரம் செய்பவர்களைப் பொறுத்தவரை இது நல்ல நேரம் தான், நன்கு பயனடைவார்கள். உங்கள் நிறுவனத்தை மேலும் வளர்க்க உங்கள் கடின உழைப்பைத் தொடருங்கள். உலக சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமான நேரம் தான் பயனடைவார்கள். மாணவர்கள் உயர்கல்வி கற்க விரும்பினால் படிப்பைத் தொடர இந்த நேரம் சரியாக இருக்கும்.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த சரியான சமயம். முன்னாள் காதல் துணை உங்களைத் தேடி மீண்டும் வரலாம். ஆனால், உங்கள் உறவு முன்பு இருந்தது போல் இருக்காது. சற்று வித்தியாசமாக இருக்கும். பழைய குற்றம், குறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு:வேலையை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால் இது அதற்கான உகந்த நேரம். பங்குச் சந்தை அல்லது உலக சந்தையில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் மிகவும் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் நீங்கள் செய்த பிழையால் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.
உங்கள் மார்பு அல்லது கண்களில் பிரச்சினை ஏற்படலாம். அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பது உங்கள் வெற்றியைத் தடுக்கலாம். நீங்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பினால் அதிக லாபம் சம்பாதிக்கலாம். காதல் உறவில் தவறான பேச்சு வார்த்தைகளின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்படலாம். இது உறவில் அதிக இடைவெளியைக் கொண்டு வரும்.
மகரம்:உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களின் வேலையில் சாதனை படைக்க முடியும். உங்கள் தொழில் வாழ்க்கையை மாற்றியமைக்கத் திட்டமிட்டால் இது அதற்கான சிறந்த தருணம். உங்கள் திறமைக்கு ஏற்ப சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த வாரம் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருக்க வேண்டும். ஒற்றைத் தலைவலி உபாதை உள்ளவர்கள் எச்சரிக்கையாக தாங்களே தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் தினசரி பழக்க வழக்கத்தில் யோகா மற்றும் உடல் பயிற்சிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்த வாரம் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். சில படிப்புகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. உங்கள் காதல் உறவில் தற்போதைய காதலன் அல்லது காதலியை விட்டு நீங்கள் பிரிந்து புதிய துணையைத் தேடிக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு புதிய துணை கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்பம்:வேலை செய்பவர்களைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பினால் வேலைகளை மாற்றிக்கொள்ள இது ஒரு அருமையான தருணம். இந்த வாரம், உங்கள் உடல்நலம் சற்று மோசமடையக்கூடும். உங்கள் அலட்சியத்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
அலுவலகத்தில் ஒரு சக ஊழியருடன் உங்களுக்கு நெருக்கம் அதிகரிக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், உங்கள் வீட்டு விஷயங்கள் நான்கு சுவர்களுக்குள் தான் இருக்க வேண்டும். கவனமாக அதைக் கையாள முயற்சி செய்யுங்கள்.
மீனம்:உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். அரசாங்கப் பதவிகளில் பணிபுரியும் நபர்கள் வேலைகளை மாற்ற விரும்பினால், இப்போது அதற்கு ஏற்ற தருணம் அல்ல. தொழில்முனைவோருக்கு எதிர்காலம் சாதகமாக இருக்கும். உங்கள் தொழிலை வளர்க்க நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
இந்த வாரம் மாணவர்களைப் பொறுத்த வரையில் கல்விரீதியாக சாதகமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் காதல் உறவுகளைப் பொறுத்த வரையில் இது சிறப்பான வாரம். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், அது சுமுகமாக முடியும். மூன்றாம் தரப்பினரின் பேச்சைக் கேட்டு உங்கள் துணையைச் சந்தேகிக்காதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் உறவில் நெருக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.