மேஷம்:தனிப்பட்ட திறன்கள் உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வெற்றியைக் கொடுக்கும். உங்களது கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை வெளியிடுவதன் மூலம் பலம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. விபத்துக்கள் அல்லது உடல்நலக் குறைவு ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும்.
ரிஷபம்:இன்று மனம் லேசாகவும், நிம்மதியாகவும் உணர்வீர்கள். நீங்கள் உற்சாகம் மிக்கவராக இருக்கலாம் அல்லது பதற்றம் உள்ளவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும், உங்கள் பணியில் கவனம் செலுத்துவீர்கள். மாலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பீர்கள்.
மிதுனம்: மற்றவர்கள் உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பார்கள். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது கடினமாக இருக்கலாம். எனினும், அதற்கான வழி உங்களுக்கு கிடைக்கும். மக்கள் உங்கள் செயல்திறனையும், அறிவுத்திறனையும் போற்றுவார்கள்.
கடகம்: மாற்றம் உங்களுக்காக காத்திருக்கிறது. பொறுமையைக் கடைப் பிடிக்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டால் வேலை எளிதாகும். பொழுதுபோக்கு அம்சங்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.
சிம்மம்:அனைத்து தரப்பிலிருந்தும் இன்று புகழ்ச்சியைப் பெறுவீர்கள். இன்று நடக்கும் அனைத்து விஷயங்களும், உங்களுக்கு சந்தோஷத்தைத் தரும் என்று கூறி விட முடியாது. உங்களைப் பாதித்து வந்த கேள்விகளுக்கு விடை காண்பீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கப்படுவீர்கள்.
கன்னி: தனிப்பட்ட வாழ்க்கை மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். அது தொடர்பான விஷயங்கள் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஏற்படும். வர்த்தகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மாலையில் சிறிது, ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.
துலாம்:பலவிதமான மனநிலைகளால் பாதிக்கப்படுவீர்கள். மாலை வரை மனக்குழப்பங்கள் இருக்கும். ஆனாலும் மாலையில் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. மிகச்சிறந்த நிகழ்வு ஒன்று ஏற்படக்கூடும் என்றாலும், பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் மனநிலையுடன் இருக்கவும்.
விருச்சிகம்: உங்களது செயல் திறன் உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும். இன்று உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். தொழில் துறையைப் பொருத்தவரை, புதிய திட்டங்களை உற்சாகத்துடன் தொடங்குவீர்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
தனுசு: உங்களது திறமைக்கான அங்கீகாரம், இப்போது கிடைக்கவில்லை என்றாலும், பின்னர் கிடைக்கும். அதனால் பொறுமையை கடைப்பிடித்துக் காத்திருப்பது நல்லது. ஏமாற்ற உணர்வு ஏற்பட்டால் அது உங்கள் செயல்திறனை பாதிக்கும். அதனால் அமைதியாக பொறுமையுடன் இருக்கவும்.
மகரம்: உணர்வுரீதியாக செயல்படுவது, பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ஆகிய இரண்டையும் பாதிக்கும். இதைப் பயன்படுத்தி, உங்களைச் சுற்றி இருப்பவர்கள், உங்களை வீழ்த்த முயற்சி செய்யலாம். அதனால் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, வெற்றிக்கான பாதையில் முன்னேறிச் செல்லவும்.
கும்பம்: செயல் திறன் மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் உங்கள் போட்டியாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வீர்கள், அதனால் அனைத்து தடைகளும் நீங்கும். வெற்றி, கருணை மற்றும் கடின உழைப்பின் காரணமாக அனைவரது மனதையும் வெல்வீர்கள்.
மீனம்: உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். கேள்விகளுக்கான பதில்களைப் பெற, உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்வீர்கள். உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை காரணமாக, முடிக்கப்படாமல் இருந்த பணிகள் முடிக்கப்படும். உங்களது விதி அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அறிவார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் செலுத்தவும். பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.