தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

துலாம் ராசிக்காரர் இன்று காதல் வயப்படக் கூடும்.. உங்க ராசிக்கான பலன் என்ன? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 6:36 AM IST

மேஷம்: சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும் என்பதில் கவனம் கொள்ளுங்கள்.

ரிஷபம்: உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடையும் வாய்ப்புள்ளது. இந்த முன்னேற்றம் நீங்கள் எதிர்பார்த்த வகையில் இருக்காது. ஆனால், நிதி தொடர்பான வாய்ப்புகளும், வெற்றிகளும் உங்களை வந்து சேரும். பொருள் ஆதாயமும் இருக்கும்.

மிதுனம்: என்றும் உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு உரையாடுவீர்கள். உங்களது நிதி நிலைமை குறித்து உங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்க இது சரியான நேரமாகும். இதனால் உங்களது மன பாரம் குறையும். நீங்கள் புத்துணர்ச்சியுடன், அனைத்தையும் உற்சாகமாக அணுகுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

கடகம்: உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பரிசு அளிப்பீர்கள். வர்த்தக கூட்டாளிகளிடம் இருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களது வாழ்க்கைத் துணைக்கான வருங்கால திட்டத்தை ஏற்படுத்த இது சரியான நேரமாகும். உங்களுக்கு கிடைத்துள்ள துணையை நினைத்து நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்: வானிலை மாற்றம் போல உங்கள் மன நிலை மாறிக் கொண்டே இருக்கும். சில சமயம் மகிழ்ச்சியாகவும் சில சமயங்களில் சோகமாகவும் இருக்கும். எனினும் அமைதியும் நிம்மதியும் ஏற்படும். உங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு சந்தோஷமாக இருக்கவும்.

கன்னி: உடல் நலன் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் கூடாது. முன்னர் ஏற்பட்ட காயங்கள் தற்போது உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இருப்பினும், இன்று அமைதியும் வளமும் ஏற்படும். இதன் மூலம் புத்துணர்வு பெறுவீர்கள்.

துலாம்: காதல் வயப்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு, நீங்கள் சந்திக்கும் காதலரை வரவேற்கத் தயாராக இருங்கள். எனினும் இந்த காதலுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

விருச்சிகம்: மனதிலிருந்து எதிர்மறையான எண்ணங்களை நீக்கவும். நீங்கள் உங்கள் குழு உறுப்பினர்களுடன் திறமையாக பணியாற்றி, அவர்களுக்கு பணிகளை சிறந்த முறையில் பங்கீட்டு வழங்குவீர்கள். அவர்களது திறன்களை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் பணிகளை ஒதுக்குவீர்கள்.

தனுசு: நீங்கள் மந்தமாக உணர்வீர்கள். எனினும், உங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு சந்தோஷமாக இருக்கவும். வெளி நாடு அல்லது நண்பர்களிடம் இருந்து வரும் நல்ல செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும்.

மகரம்: உங்கள் குறிக்கோளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அறிவார்ந்த வளர்ச்சி ஒப்பற்றதாக இருக்கும். உங்கள் நோக்கமும் சரியாகவே இருக்கும். உங்கள் உறுதிப்பாடு காரணமாக, முடிவுகளை திறமையாக எடுப்பீர்கள்.

கும்பம்: உங்களுடைய பேச்சாற்றல் மூலம் மக்களை கவர்வீர்கள். கூட்டங்களில் பங்கேற்கும் போது, இந்த திறன் மிகவும் பயன் மிக்கதாக இருக்கலாம். உண்மையில், உங்கள் அனைத்து வாதங்களும் மிகவும் இணக்கமானதாக இருக்கும்.

மீனம்: 'உன் அயலானை நேசியுங்கள்' என்பதை நீங்கள் கடைப்பிடிப்பீர்கள். ஆன்மீக புத்தகங்களை படித்ததன் மூலம் நீங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள். ஆன்மீக விஷயங்களில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும் என்பதால், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details