மேஷம்: எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும்போது, பொது அறிவுடன் சிந்தித்து அதை செயலாற்றுவது நன்மையைத் தரும். திட்டங்களை தீட்டவும், கணக்கீடுகளை உருவாக்கவும் உங்கள் பொது அறிவின் அடிப்படையிலேயே இறுதி முடிவை எடுங்கள்.
ரிஷபம்: வணிக விவாதங்களை நண்பர்களுடன் மேற்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மேலும், உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து சிறப்பான கவனிப்பு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
மிதுனம்: மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் கருத்தை கவனமாக கேட்டு, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவ வேண்டும்.
கடகம்: சில பிரச்சினைகளை தீர்க்க, சற்றே இலகுவாக இருப்பதும், பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வதும் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில், உங்களின் அன்பானவர்களிடம் அதிக நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
சிம்மம்:உங்கள் பங்குதாரர் அல்லது வாழ்க்கைத் துணையிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது. தொழில் செய்பவர்கள், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். முக்கிய ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்த பிறகே கையெழுத்திடவும்.
கன்னி: தடைகளை தகர்க்க உயர் இலக்குகளை நீங்களே அமைக்க வேண்டும். நிதி நிலைமை பற்றி அதிக கவலை எழும். இருந்தாலும் கூட, மாலை நேரத்தில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு, உங்கள் இலக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வீர்கள்.
துலாம்: அரசாங்கம் தொடர்பான வேலைகள் இன்று உங்களுக்கு நன்மையளிக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நெருக்கமாகும். நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட முடியும்.
விருச்சிகம்: மூத்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இன்று முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று மாலை நேரத்தில் திருமணத்திற்காக வரன் வரலாம்.
தனுசு: பகுதி நேர பயிற்சியில் சேர்ந்து, உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் புதைந்திருக்கும், நீங்களே அறியாத திறமையை வெளிக்கொணரலாம். உங்கள் ஆசைகளை உயிர்ப்புடன் வைத்தால் அவை வெற்றி பெறலாம்.
மகரம்: உங்கள் மனதில் காதல் எண்ணங்கள் அதிகமாக தோன்றும். நினைவுகளை பின்னோக்கி அசைபோட்டு, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கழித்த சில பொன்னான நேரத்தை எண்ணி நெகிழ்ந்து போவீர்கள். தொழில்ரீதியாக, முக்கியமான லட்சியங்களை அடைவீர்கள்.
கும்பம்: உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சில கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். இருந்தாலும், இந்த அனுபவம், திட்டமிடுவது பற்றி உங்களை சிந்திக்கவும், ஒழுங்கமைக்கவும் தூண்டலாம். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.
மீனம்: அதிக சகிப்புத்தன்மையும், தாராள மனத்துடன் இருப்பீர்கள் என்பதால் பிறரது தவறுகளை மன்னிப்பீர்கள். ஆனால், பிறர் தேவைக்கு அதிகமாக உங்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.