தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: இனிமேல் அனைத்து செயல்களிலும் உங்களுக்கு வெற்றி தான்..! எந்த ராசிக்காரர் தெரியுமா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: ஜூன் 30ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்)
இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 7:00 AM IST

மேஷம்: நீங்கள் உணர்ச்சிவசப்படுவதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். தோல்விகளால் சோர்வு அடைவீர்கள். உங்களுக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைதல் நன்மை பயக்கும்.

ரிஷபம்: உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைவதுடன் திருவிழாக்கள் போன்ற விழாக்களில் நீங்கள் பங்கேற்க நேரிடலாம். காரிய சித்தி அடைய அனுகூலமான நாளாக அமையும். உங்களின் எண்ணங்கள் மற்றும் நம்பிக்கையால் உற்சாகம் பெற வாய்ப்புள்ளது.

மிதுனம்: உங்கள் வேலைப்பளு மற்றும் வேலைகளில் இலக்குகளை அடைவதிலும், உங்கள் வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளை சமாளிப்பதிலும், சற்று சிரமம் ஏற்படலாம். இருப்பினும் வேலைக்கும், குடும்பத்திற்கும் இடையே சரியான நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

கடகம்: உங்களுக்குப் பொறுப்புகள், வேலைப்பளு இருந்தபோதிலும் உங்களின் வீட்டிற்காக நாள் முழுவதையும் செலவிட வாய்ப்புள்ளது. மாலைநேரத்தில் குடும்பத்தினரிடம் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்.

சிம்மம்: நீங்கள் மற்றவர்களுக்கு உதவி புரியும் எண்ணம் இருந்தாலும், அதில் வெற்றி அடைவது கடினம். நாளின் பிற்பகுதியில் உங்கள் சந்தேகங்களுக்குத் தெளிவு பிறக்கும். வேண்டிய பலனை அடைய கடினமாக முயற்சித்தல் அவசியம்.

கன்னி: உங்களின் தைரியமான இயல்புத்தன்மை மற்றவர்களை கவரக் கூடியதாக அமையும். எனினும், சில இடர்ப்பாடுகள் இருப்பதால் கவனமாக இருக்கவும். உங்களின் ஆழ்ந்த சிந்தனையின் உங்களிடம் நிறைய முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்: உங்களின் அன்புக்குரியவர்களிடம் காதலை வெளிப்படுத்த விரும்புவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக உங்களின் தோற்றத்தை மேம்படுத்தும் முயற்சி செய்வீர்கள். உங்களை நேசிப்பவர்களிடம் உங்கள் கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள்.

விருச்சிகம்: கணவன் மனைவிக்கு இடையே மன ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் உங்கள் திறமையினால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வாய்ப்புள்ளது. அனைத்து செயல்களிலும் வெற்றி அடையும் நன்னாளாக அமையும்.

தனுசு: நீங்கள் வணிக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் நிதி விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும். வெற்றியைக் கொண்டாடும் நாளாக இன்று அமையப் பெறலாம்.

மகரம்: உங்களின் குடும்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள அதிகம் உழைக்க வாய்ப்புள்ளது. அதிக வேலைப்பளுவினால் கணவன் மனைவிக்கு இடையே அதிருப்தி ஏற்படும். இன்று உங்களின் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். அலுவலக உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதுடன், எதிரிகளைத் தோல்வியுறச் செய்வீர்கள்.

கும்பம்: உங்கள் வாழ்க்கையில் நண்பர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடும் வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சுத் திறமையால் வெற்றி உங்கள் வசப்படும். உங்கள் போட்டியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி எதிரிகளும் உங்கள் திறமையை பாராட்ட வாய்ப்புள்ளது.

மீனம்: வேலைப்பளு மிகுந்த நாளாக அமையப் பெறலாம். உங்களின் போட்டியை எதிர்கொள்ளும் திறனால் வெற்றி அடையப் பெறலாம். உங்களுக்கு பாராட்டு கிடைக்கப்பெறும் நன்னாளாக அமையும்.

ABOUT THE AUTHOR

...view details