தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும்! - எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: ஜூன் 28ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 7:43 AM IST

மேஷம்: நீண்ட காலமாக நீங்கள் ஆர்வம் கொண்ட ஏதாவது விஷயத்தைக் கற்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். இந்த நாள் ஒரு நல்ல, சிறப்பான நாள். மேலும், இன்று உங்களுக்கு இனிமையான வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்: உங்களுக்கு நெருக்கமானவர் அனைவரும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவைக் கொடுக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நிதர்சனத்தை புரிந்து கொள்ளவும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். மேலும் நீங்கள் மோதல்களைத் தவிர்ப்பதும், பிரச்சனையை சரியாக கையாள உதட்டில் புன்னகையை காட்டுவதும் அவசியம்.

மிதுனம்: உங்கள் பணிகளை செய்து முடிக்க மூளையை கசக்கிப் பிழிய வேண்டியிருக்கும். உண்மையில் நீங்கள் முதலாளியாக இல்லாவிட்டாலும் கூட, அதுபோன்ற தோரணையை காட்ட வேண்டியிருக்கும். உங்கள் அசாதாரண புத்திசாலித்தனம், அபாரமான செயல்திறனாக வெளிப்பட்டு இன்று உங்களுக்குப் பாதுகாப்பான அரணாகும். குடும்பம் தான் உங்கள் வெற்றிக்கு அடித்தளம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

கடகம்: கடினமாக உழைத்து வேலை அல்லது வியாபாரத்தில் உங்களுக்கான இடத்தை தக்கவைப்பீர்கள். கூட்டாளிகளுடனான உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும். நெகிழ்வும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் நிலவும். உங்கள் அன்புக்குரியவருடன் இணைந்து இன்றைய மாலைப்பொழுதை உல்லாசமாக செலவிடுவீர்கள்.

சிம்மம்: சொந்த வாழ்க்கை அல்லது வேலை தொடர்பான முக்கிய விஷயத்தை கவனமாக கையாண்டு, நாசூக்காக செயல்படவேண்டும். நடுநிலைமையை கடைபிடியுங்கள். இன்று சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயர்ந்து மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

கன்னி: உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு உங்களுக்கான நாளாக உருவாக்கும். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக்குவீர்கள்.

துலாம்: உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனதை சமநிலையில் வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்: நீங்கள் வெவ்வேறு விருப்பங்கள் மற்றும் மனோநிலை கொண்ட மக்களை சந்திக்கலாம். அதில் சிலர் உங்களை ஆச்சரியப்படச் செய்யலாம். சில நேரங்களில், உங்களுடைய வெற்றியை பிறர் வேறுபட்ட விதத்தில் பார்ப்பது ஏன் என்பதை புரிந்துகொள்வது கடினம். இவற்றை புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்துடன் கையாள்வது நல்லது.

தனுசு: உங்கள் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளால் நீங்கள் எடுக்கும் பணி எல்லாம் சிறப்பாக முடியும். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அது சரியான பாதையில் உங்களை வழிநடத்தும். இறையாற்றலின் கருணை உங்கள் மேல் இருக்கிறது. இந்த நாளை நல்ல நாளாக மாற்றிக் கொள்ளவும்.

மகரம்: நாள் முழுவதும் உள்ள வேலையால் ஏற்படும் அழுத்தத்தால், உங்கள் ஆற்றல் குறைந்தாலும், உங்கள் உற்சாகம் மட்டும் குறையாது. எதிராளிகளுடன் கடுமையாக போட்டி நிலவும். ஆகவே, புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு, சரியான முறையில் செயல்படுவீர்கள்.

கும்பம்: சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். எனினும், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமானால், உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நலன்களை தியாகம் செய்ய வேண்டும்.

மீனம்: உங்களுக்கு செலவுகள் அதிகம் இருந்த போதிலும், தேவையுள்ள செலவுகளுக்கு திட்டமிட்டு, தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமித்தல் அவசியமாகும். தக்க தருணத்தில் அந்த சேமிப்பு உங்களுக்கு கைகொடுத்து உதவலாம்.

ABOUT THE AUTHOR

...view details