தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: எதிர்பாராத லாபங்கள் கிடைக்கலாம்.. ஆனால் அதை பயன்படுத்துவதில் கவனம் தேவை! - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: ஜூன் 27ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 6:37 AM IST

மேஷம்: நீங்கள் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பணிகளில் ஈடுபடலாம். சுற்றுப்புற சுத்திகரிப்பு, தெருக்களிலிருந்து குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்வீர்கள். இருப்பினும், சுற்றுச்சூழலுக்கு நற்செயல்களைச் செய்ய நீங்கள் விரும்பினாலும், ஒரே நேரத்தில் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

ரிஷபம்: உங்களது சாதுரியமான பேச்சுத்திறமையால் வியாபார ஒப்பந்தங்கள் இன்று சிறப்பாக முடிவடையும். இருந்தாலும், இந்த நடவடிக்கைகளால் இன்றைய தினத்தின் செயல்பாடுகள் மெதுவாகவே நடைபெறும். உணர்வுப்பூர்வமாகவும், நெருக்கமாகவும் உணர்வதைத் தவிர்த்தால், பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

மிதுனம்: குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் உங்கள் ஆசை இன்று ஊக்கமடையும். சுற்றுலா பயணத் திட்டத்தைத் திட்டமிடுவீர்கள். இது பயணத்திற்கு உகந்த நேரம். உங்கள் பயணத்திட்டத்தை பட்ஜெட்டுக்குள் அடங்குமாறு திட்டமிடுவீர்கள்.

கடகம்: மிகுந்த விவேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் கொடுக்கப்பட்ட வேலையை விரைவில் நிறைவேற்றுவீர்கள். வேலை செய்வதற்கான உங்கள் ஆற்றல் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

சிம்மம்: சிரமங்கள் மற்றும் தடைகளை திறமையோடு கையாள்வதோடு, எப்படியாவது வெற்றியடைவதே உங்கள் திட்டவட்டமான இலக்காக இருக்கும். தொழிலிலோ அல்லது வியாபாரத்திலோ கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாகத் தொடரும்.

கன்னி: உங்கள் பேச்சுத்திறமை மற்றும் படைப்பாற்றலே உங்களுக்கு வல்லமை மிக்க ஆயுதங்கள் என்று சொல்லலாம். ஆக்கப்பூர்வமான அணுகுமுறையையும் மகிழ்ச்சியையும் நீங்கள் பரப்ப வேண்டும். ஏதாவது அழுத்தமோ அல்லது சுமையோ இருந்தால் மட்டுமே, உங்கள் கற்பனை முழுமையாக வெளிப்படும்.

துலாம்: உங்களுடைய வட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவியாக இருப்பார். எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் மற்றொரு கூட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பீர்கள். உங்கள் தொழில் திறமையும், வேலையில் காட்டும் அக்கறையும் உரிய மதிப்பைப் பெறும்.

விருச்சிகம்: முதலாளியிடம் இருந்து திட்டு வாங்க வேண்டியிருக்கும். மேலும், சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்காது. தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் புதுமுகங்களுக்கு நேர்காணலில் வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.

தனுசு: உங்களிடமிருந்து பணம் எளிதாக கைநழுவும் வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவினங்களைக் குறைக்க முயலுங்கள். நாள் முழுவதும் நிதி தேவைகளை சமாளிக்க முயன்றாலும், மாலை வேளையில், நேர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படும். அமைதியாக அமர்ந்து ஓய்வெடுக்க விரும்புவீர்கள்.

மகரம்: உங்கள் வேலையை முடிப்பதற்காக நாள் முழுவதும் செலவிட்ட பிறகு, எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். திடீரென எதிர்பாராத லாபங்கள் கிடைக்கலாம், ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்தினால் நல்லது என்பதைக் கவனமாக ஆலோசிக்க வேண்டும்.

கும்பம்: அனைத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும் என ஒரு சில நாட்கள் முயல்வீர்கள். அப்படிப்பட்ட ஒரு நாள் இன்று. உங்கள் சொந்த நலனுக்காக எதிரிகளின் திட்டங்களை நீங்கள் தவிடுபொடியாக்குவீர்கள். குறிப்பாக, கடுமையான சூழலில் உங்களுடைய வலிமையை நீங்கள் நிரூபிப்பீர்கள்.

மீனம்: வாழ்க்கையில் நிதி திட்டமிடல் என்பது மிகவும் முக்கியமானது. இன்று அதற்காக உங்கள் ஆற்றலை நீங்கள் செலவிடுவீர்கள். திடீரென்று உங்கள் பணத்தை நீங்கள் இழக்கலாம். குடும்பத்தில் ஒருவர் எதிர்பாராமல் நோய்வாய்ப்படுவது கவலையைத் தரும். இருப்பினும், விரைவில் அது சரியாகிவிடும். இதை நினைத்து கவலைப்பட வேண்டாம்.

ABOUT THE AUTHOR

...view details