தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசி பலன்: வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறப்போகும் நாள் இது! - எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - Today Rasipalan in Tamil - TODAY RASIPALAN IN TAMIL

Today Rasipalan in Tamil: ஜூன் 26ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 7:12 AM IST

மேஷம்: மனதில் மகிழ்ச்சி பொங்கும். தோட்டத்தில் வேலை செய்வது, செடிகள் நடுவது அல்லது சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்துவது போன்ற பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

ரிஷபம்: உங்களது சாமர்த்தியமான வார்த்தைகளால் வியாபார ஒப்பந்தங்கள் எளிதில் முடிவடையும். காலையில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும் நீங்கள், நாளின் இறுதியில் சோர்வாக உணரலாம். உணர்வுப்பூர்வமாக செயல்படுவதைத் தவிர்த்தால், எதிர்வரும் நாட்களில் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

மிதுனம்: தினசரி வேலைகளிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். புத்துணர்வு பெற இன்ப சுற்றுலா மேற்கொள்ளலாம். எதிர் பாலினத்தவரிடமிருந்து உங்களுக்கு இயல்பாகவே ஆதரவு கிடைக்கும். யாரையாவது காதலித்தால், அது தொடர்பான விசயங்களில் தீர்வு கிடைக்கும்.

கடகம்: உங்கள் தொழில் சம்மந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்தும் போது வியாபார அறிவும், நுணுக்கமும் உதவியாக இருக்கும். உங்கள் தலைமைப் பண்பின் திறன்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னதாகவே வெளிப்படக்கூடும், அது ஒரு ஆர்டரை நிறைவு செய்வதாகவோ அல்லது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, அவற்றை விற்பனை செய்வதாகவோ இருக்கலாம்.

சிம்மம்: நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக சில நற்செய்திகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. அது உங்களுக்கு நன்மைகளை மட்டுமே கொடுக்கும். இது உங்கள் பணியிடத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும், உங்கள் உள்ளார்ந்த திறமைகளுக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் இருந்து உற்சாகமூட்டும் வார்த்தைகளும், சக பணியாளர்களிடமிருந்து நல்ல ஆதரவையும் எதிர்பார்க்கலாம்.

கன்னி: பேச்சாற்றலும் ஆக்கப்பூர்வமான திறமைகளும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வீர்கள் என்ற போதிலும், எந்தவித அழுத்தமோ அல்லது சிக்கல் இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

துலாம்: பெரிய இலக்கு வைத்திருக்கும்போது, சிறிய விஷயங்களை சமாளிப்பது எரிச்சலை உண்டாக்கும். இருப்பினும், இது உங்கள் உற்சாகத்தை குறைக்காது. ஏனென்றால், அதன் மூலம் புதிய சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றலாம். இன்று நீங்கள் கிரகிக்கும் சில விஷயங்கள் உங்களை சமநிலையில் தக்கவைக்க உதவலாம்.

விருச்சிகம்: வாழ்க்கையில் இதுவரை அனைத்து உயரங்களையும் அனுபவித்து வந்த நீங்கள், இன்று தொழிலில் இழப்பை சந்திக்க நேரிடலாம். முதலாளி, சகாக்கள் மற்றும் உங்களுக்கிடையே உள்ள புரிதலில் சற்று சுணக்கம் ஏற்படலாம். இருந்தாலும், அதை மாலைக்குள் சரிசெய்து விடுவீர்கள். புதிதாக தொழிலில் இறங்கியவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

தனுசு: தேவையற்ற செலவுகள் உங்களை சிந்திக்க வைக்கலாம். திட்டமிடுதல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக சிந்தித்து செலவிடுவதில் நேரம் விரயமாகும். கடுமையான பணிச்சுமைக்குப் பிறகு உற்சாகமான மாலை மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்.

மகரம்: நாளின் முற்பகுதியில் அவநம்பிக்கை ஆக்கிரமிப்பதோடு, பணிச்சுமையும் அதிகரிக்கும். நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலை செய்வதோடு, வெளியாட்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய பணிகளும் சேர்ந்து உங்களுக்கு அழுத்தம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக உணவருந்தும் சூழ்நிலை ஏற்படும்.

கும்பம்: பெரிய திட்டங்களைத் தீட்டுவதற்கான முக்கியமான நாள் இன்று. வீடு வாங்குவது தொடர்பான முடிவை எடுக்கும் வாய்ப்புண்டு. வேலை மாற்றம் அல்லது திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது என வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கும் நாளாக இந்த நாள் மாறலாம். திடீரென எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் தென்படுகின்றன. மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் உற்சாகமான நாள் இது. இன்று எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

மீனம்: செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட வேண்டிய நாள் இது. முன்னுரிமை வேலை என்ன என்பது குறித்த யதார்த்தமான தொலைநோக்கு கோணத்தைப் பெறுவதோடு, இருக்கும் நேரத்தில் இலக்கை எவ்வளவு அடைய முடியும் என்ற கணிப்பையும் செய்யவேண்டும். நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பது மேலும் காலதாமதத்திற்கு வழிவகுக்கும்.

ABOUT THE AUTHOR

...view details