தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: மனதிற்கு பிடித்தவரின் மனதில் இருப்பதை புரிந்து கொள்ளும் நாள் இது! எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - Today Rasipalan in Tamil

Today Rasipalan in Tamil: ஜூலை மாதம் 7ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 7:06 AM IST

Updated : Jul 7, 2024, 9:29 AM IST

இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்)
இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

மேஷம்: நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த நீங்கள், முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்கால பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால், நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.

ரிஷபம்: எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாக செயல்படவும். நன்றாக சிந்தித்து, பொறுமையாக செயல்படவும். தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் சிறந்த வெற்றியடைவீர்கள்.

மிதுனம்: கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் தோன்றும். அதனால், நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை ஒருபோதும் பாதிக்காது.

கடகம்: உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றைய தினத்தில், உங்கள் காதல் உறவிற்காக, நேரம், பணம் ஆகியவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்: பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக்கூடும். நீங்கள் முதலீட்டாளர் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்த கடன்களை தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கன்னி: குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும் உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையை பொருத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் கோயிலுக்குச் செல்ல பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.

துலாம்: உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்கள் மனதிற்குப் பிடித்தவருடன், மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை, உங்களது வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வார். ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருந்து, சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்: சிறிது மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலை பளு அதிகரித்ததன் காரணமாக, சோர்வாக உணர்வீர்கள். சில சமயங்களில் எரிச்சல் உணர்வும் ஏற்படலாம். மனநிலையை மாற்றிக் கொள்ள, நீங்கள் உங்கள் காதல் உறவுடன், நேரம் செலவழிப்பீர்கள்.

தனுசு: சோதனைக் காலங்கள் எப்போதுமே நீடிப்பதில்லை, உறுதியான மனிதர்கள் நிலைத்து நிற்பார்கள். இதனை மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவும். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் வாழ்க்கையை எளிமையாக்கவும். தேவைப்பட்டால் மனந்திறந்து பேசவும். தேவையில்லாத நெருக்குதலுக்கு அடிபணிய வேண்டாம்.

மகரம்: உங்களது வெற்றி, உங்களுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கும். இதன்மூலம் எந்தவித கடினமான நிலைமையையும் சமாளிக்கும் திறனை பெறுவீர்கள். வெற்றி பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது.

கும்பம்: நீங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி நடுநிலையுடன் செயல்படுவீர்கள். உங்களது பணியில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை இரண்டிற்கும், முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையுடன் செயல்படுவீர்கள்.

மீனம்: நிதி நிலைமையை பொருத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும்.

Last Updated : Jul 7, 2024, 9:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details