தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: சேமிப்பின் அவசியத்தை கற்றுக் கொள்வது நல்லது.. எந்த ராசிக்குத் தெரியுமா? - TODAY RASIPALAN IN TAMIL

ஜனவரி ஆறாம் தேதி திங்கட்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 6:29 AM IST

மேஷம்: இன்று உங்கள் தோற்றத்தை மேம்படுத்த அதிக முயற்சிகள் செய்யலாம். உங்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் நாளாக அமையக்கூடும். வெளிப்புற தோற்றத்தை வைத்து உறவுகளே அளவிடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு காதல் உணர்வு அதிகம் இருக்கும். மனதிற்குப் பிடித்தவர் பற்றிய எண்ணம் உங்களை ஆக்கிரமித்தது மட்டுமின்றி, கனவிலும் ஆக்கிரமிப்பார்கள். இன்றைய மாலைப் பொழுதில், காதல் துணையுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் லாபமானதாகவும், முற்போக்கான நாளாகவும் இருக்கும். வேலைகளில் உற்சாகமான ஊக்குவிப்பையும், பாராட்டையும் எதிர்பார்க்கலாம். அத்துடன் உங்கள் பொறுப்புகளும் அதிகரிக்கும். எனினும், வெற்றியை உங்கள் தலைக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

கடகம்: நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு எதிர்காலத்தில் நன்மைகளைக் கொடுக்கும். இன்று உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவீர்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

சிம்மம்:சில செல்வந்தர்கள் விருந்து உண்டு கொண்டிருக்கும் வேளையில், பெரும்பாலான மக்கள் ரொட்டித்துண்டுக்கே அலைந்து கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய இதேபோன்ற சூழ்நிலையை இன்று நீங்கள் எதிர்கொள்ளலாம். தேவையற்ற செலவுகளை செய்வதற்கு முன்பு அவசியமா? இல்லையா? என்று சிந்தியுங்கள். எறும்பு தேவைக்காக முன்கூட்டியே சேமித்து வைக்கும் என்ற கதையிலிருந்து சேமிப்பின் அவசியத்தை கற்றுக் கொள்வது அவசியமானது.

கன்னி: இன்று அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள்; உங்கள் மன அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் காரணிகள் எதுவும் இல்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களை முழுமையாக ஆதரிப்பதோடு, தடைகளை சமாளிக்க அர்ப்பணிப்புடன் உழைக்க ஊக்குவிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகூட உங்களுக்கு ஒப்படைக்கப்படலாம்.

துலாம்:கடந்த கால அனுபவங்களிலிருந்து பிரகாசமான எதிர்காலத்திற்காக நிறைய படிப்பினைகளை கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்குச் சொந்தமான சில விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பாக சற்று அதிகமாகவே உரிமை கொண்டாடுவீர்கள். பல்வேறு விஷயங்களைப் பற்றி நாள் முழுவதும் சிறிய அளவிலான கவலைகள் தொடரும். அவற்றால் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படலாம்.

விருச்சிகம்:ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி, உடல்பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், சந்தோஷமாக இருங்கள்.

தனுசு:உங்களின் சொந்த கருத்துக்களை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பிரதிபலிப்பின் மூலம் உங்களின் பல்வேறு சிக்கல்களுக்கான காரணத்தை கண்டறிய முயல்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டாலும், விவேகமாக செயல்பட முயற்சி செய்வீர்கள்.

மகரம்:உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையின் அளவு அதிகமாக இருப்பதால் நாள் முழுக்க நிற்கவே நேரம் இருக்காது. அது உங்கள் உற்சாகத்தை குறைக்கச் செய்யும். பிற்பகலில் நீங்கள் சோர்வடைந்துவிடுவீர்கள். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, கவனமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கும்பம்:சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்களுக்கு இன்று அந்த முயற்சியில் வெற்றி கிட்டும். எனினும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, உங்களுடைய சொந்த முன்னுரிமைகள் மற்றும் நலன்களைத் தியாகம் செய்ய வேண்டும். ஒரு சமாதான செயலராக செயல்படுவது நல்ல விஷயம் என்றாலும், பிறர் அதை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

மீனம்:உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். செய்ய வேண்டிய மாற்றங்களை தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள். இதுபோன்ற விஷயங்களில் தற்போதுகூட உங்கள் மனதின் குரலையே நீங்கள் கேட்கிறீர்கள். இருப்பினும், இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருப்பதால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

ABOUT THE AUTHOR

...view details