தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ கிடைக்க வாய்ப்புண்டு! - TODAY RASIPALAN IN TAMIL

ஜனவரி நான்காம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 6:31 AM IST

மேஷம்:இன்று புரிந்துகொள்ள முடியாத அற்புதமான சம்பவங்கள் நிகழும். அது நீங்கள் எதிர்பாராத சம்பவமாக இருந்தாலும் நன்மை பயப்பதாகவே இருக்கக்கூடும். அது நிலைமையை அடியோடு மாற்றிவிடாது என்றாலும், ஒரு சில விஷயங்களை மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் வேலையை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ரிஷபம்: உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஏமாற்றம் மற்றும் எரிச்சலின் காரணமாக, பல விஷயங்களில் தேவையில்லாத உரிமையுணர்வுடன் நடந்து கொள்ள நேரிடும். ஊழியர்களை பாதுகாக்கும் உங்கள் அணுகுமுறை யாருக்கும் உகந்ததாக இருக்காது.

மிதுனம்:குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் உங்கள் ஆசை இன்று ஊக்கமடையும். சுற்றுலா பயணத்தை திட்டமிடுவீர்கள். இது பயணத்திற்கு உகந்த நேரம். உங்கள் பயணத்திட்டத்தை பட்ஜெட்டுக்குள் அடங்குமாறு திட்டமிடுவீர்கள்.

கடகம்: வேறு எதையும் விட வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த விவேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் கொடுக்கப்பட்ட வேலையை விரைவில் நிறைவேற்றுவீர்கள். வேலை செய்வதற்கான உங்கள் ஆற்றல் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

சிம்மம்: சிரமங்கள் மற்றும் தடைகளை திறமையாகக் கையாள்வதோடு, எப்படியாவது வெற்றியடைவதே உங்கள் திட்டவட்டமான இலக்காக இருக்கும். தொழிலிலோ அல்லது வியாபாரத்திலோ கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாகத் தொடரும்.

கன்னி: வாழ்க்கையில் திருப்புமுனை அவசியமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. இன்று எதைச் செய்தாலும் அதை சிறப்பாகவே செய்வீர்கள். இன்று உங்கள் முன்னுரிமை பட்டியலில் பிரதான இடம் பிடிப்பது நிதி விஷயங்கள் மற்றும் உறவுகள் என்றாலும், அவற்றின் மாற வாய்ப்புண்டு. ஆன்மீகத்திற்காக அதிக நேரம் செலவிடும் வாய்ப்புண்டு.

துலாம்: புதிய விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள முயல்வீர்கள். உற்சாகம் மற்றும் நேர்மறையான உணர்வால் நிறைந்த நாள் இது. நண்பர்களுடன் உரையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எனவே, அவர்களுடன் உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையிடம் இருந்து பல நன்மைகள் இன்று தேடிவரும். நெருங்கிய உறவினரோடு, இன்றைய தினத்தை மகிழ்ச்சியுடன் செலவழிப்பீர்கள்.

விருச்சிகம்:உன்னுடைய விருப்பங்களை அழுத்தமாக, மோதல் போக்குடன் சொல்ல வேண்டியிருக்கலாம். இருந்தாலும், உங்கள் பற்றிய அபிப்ராயத்தை அது தவறாக சித்தரிக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும். பெரிய அளவிலான திட்டங்களில் பிரச்சனை ஏற்படாமல் கவனமாக இருக்கவேண்டும் என்ற தெளிவு அவசியம்.

தனுசு:அறிவுப்பூர்வமான வார்த்தைகளும், ஒரு கதாநாயகன் போல் செயல்படுவதும் இன்றைய உங்கள் பாணியாக இருக்கும். பணியில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம், குறிப்பாக ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ கிடைக்கலாம். அக்கவுண்டண்ட்டுகளுக்கு நல்ல நாள், கடை வைத்திருப்பவர்களுக்கு இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மகரம்:நீங்கள் தீவிரமான காதல் உள்ளம் படைத்தவர், உங்கள் அன்புக்கு உரியவரை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்பவர். இருந்தாலும், கற்பனை உலகத்திலேயே வாழ்வது நல்லதல்ல. ஏனெனில் எல்லா இடங்களிலும் உங்களை சிக்கல்கள் பின்தொடர்கின்றன. நீங்கள் தொழிலதிபராக இருந்தால், உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் உரிய கவனம் தேவை.

கும்பம்:சில சமயங்களில், நீங்கள் எல்லாவற்றையும் அறிய அதீத விருப்பம் கொண்டிருப்பீர்கள். இன்றும் அதுபோன்ற ஒரு நாளே. நீங்கள் ஒரு தகுதி வாய்ந்த எதிரி என்பதையும் நிரூபிப்பீர்கள். உங்கள் எதிரிகளின் திட்டங்களை தெரிந்து கொள்வது, உங்களுடைய சொந்த நலனுக்கு நன்மை பயக்கும். இதற்கு நீங்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க வேண்டும். குறிப்பாக கடுமையான சூழலில் உங்கள் வலிமையை நிரூபிப்பீர்கள்.

மீனம்: பணத்தின் முக்கியத்துவம் தற்போது உங்களுக்குப் புரியும், இன்று முழுவதுமே அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். குடும்பத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும், அதேபோல் குடும்பத்தினரும் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள்.

ABOUT THE AUTHOR

...view details