தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கப் போகுது.. வாங்க பாக்கலாம்! - TODAY RASIPALAN IN TAMIL

ஜனவரி பத்தாம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

மேஷம்:நீங்கள் விரும்பத்தகாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. நீங்கள் அதனை தவிர்க்க எவ்வளவு முயற்சி செய்தாலும், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. சிறிது நேரம் அமைதியாக இருக்கவும். ஏனென்றால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, சாதகமான பலன் கிடைக்காத வாய்ப்பே உள்ளது.

ரிஷபம்:இன்றைய தினத்தில், நீங்கள் அதிகம் யோசிக்காமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற உங்களது நினைப்பின் காரணமாக, தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் செயலை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே, உங்களது பிரச்சனைக்கான தீர்வுகள் கிடைக்கும்.

மிதுனம்:சமூக மட்டத்தில் உள்ளவர்கள், உங்களை ஒரு தலைமை தாங்கும் நபராக காண்பார்கள். உங்கள் மனதுக்குப் பிடித்ததை அடைய, அதன் மீது கவனம் செலுத்துவது அவசியம். சில காலங்களாக, பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை காணும் வகையில், சில சந்தேகங்களை தீர்ப்பதற்கான, ஆக்கப்பூர்வமான தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள்.

கடகம்:இன்று கடவுளின் ஆசி காரணமாக உங்களுக்கு வெற்றி கிட்டும். முடிக்கப்படாமல் இருந்த பணிகளை முடித்து, மற்றவர்களை விடத் திறமையாக செயல்பட, மாணவர்களுக்கு இது பொன்னான காலமாகும். உங்கள் மனதில், கற்பனை தீ கொழுந்துவிட்டு எரிகிறது. நீங்கள் விரும்பிய அனைத்தும், இன்று உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

சிம்மம்:வீட்டு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டைச் சீரமைக்கும் பணியில் நீங்கள் ஈடுபடலாம், அதனால் வீட்டில் உள்ள மரச்சாமான்களை மாற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

கன்னி:உங்கள் இதயத்தின் ஓரத்தில் தேக்கி வைத்த உணர்ச்சிகள் இன்று வெளிப்படலாம். உங்கள் உடைமைகள் மீது உணர்ச்சி ரீதியான பிணைப்புகளை உருவாக்கலாம். எனினும், சூழல் உங்களுக்கு உகந்ததாக இல்லை என்பதால், நீங்கள் மிகவும் பதற்றமாக உணரலாம்.

துலாம்:திருமணமானவர் என்றால், கணவன், மனைவிக்கு இடையே உறவு பலப்படும். குடும்பத்தினர்களுடன் வெளியே செல்வதாலும், விருந்திற்கு ஒன்றாக செலவிடுவதாலும் உறவு மேம்பட்டு வலுப்படும் வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் சிறந்த நாளாக அமையப் பெறும்.

விருச்சிகம்:நற்செயல் செய்வதுடன், அதற்கான பலனை எதிர் பார்த்தல் கூடாது. பணியில் முழு கவனத்துடன் முயற்சி செய்தல் அவசியம். வியாபாரத்தில் பொறுமை மற்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் பொறுமையாக கையாளுதல் அவசியமாகிறது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவது முக்கியம்.

தனுசு:உங்களைச் சுற்றி இருக்கும் நல்ல உதவி புரியும் அன்பர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கலாம். அவர்கள் கூறும் அறிவுரை உங்களின் நன்மைக்காக என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் அறிவுரையை மனதில் கொண்டு சந்தேகமின்றி உங்கள் முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மை அடைய வாய்ப்புண்டு.

மகரம்:அனைத்து நாட்களும் ஒன்றாக இருக்காது. இன்று, நீங்கள் குழப்பமான எண்ணங்கள் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவீர்கள். எதிர்மறையான உணர்வுகளிலிருந்து விடுபட முடியவில்லை என்றாலும், உங்கள் கடின முயற்சிக்கு பலன் ஏற்பட்டு, வருங்காலத்திற்கான சிறந்த அடித்தளத்தை அமைப்பீர்கள்.

கும்பம்: வாழ்க்கையின் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடுவதன் மூலம், உங்கள் அறிவுத் திறன் மிகவும் அதிகரிக்கும். இது இந்த நாளின் முக்கிய அம்சமாகும். உங்களது திறன்களை நீங்கள் முழுமையாக பயன்படுத்துவீர்கள். ஆனால், இதனால் உங்களுக்கு சிறிது சோர்வும் ஏற்படலாம்.

மீனம்:வர்த்தகத் துறையில் உள்ள சில தடைகள் காரணமாக உங்கள் மனது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதா? பிரச்சினையின் மூல காரணத்தை அறிந்து, அதற்கான தீர்வை யோசிக்கவும். பொறுமையாகச் செயல்பட்டு, உங்கள் முயற்சியின் மீது நம்பிக்கை வைப்பது நல்லது. தகுந்த நேரத்தில், உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ABOUT THE AUTHOR

...view details